தத்துவ நிச்சயம்
தத்துவ நிச்சயம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.
இது நெஞ்சுவிடு தூது எனவும் கூறப்படும்.
- காலம் 15-ஆம் நூற்றாண்டு.
- தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
- சொரூபானந்தரை இந்தப் பாடல்கள் புகழ்கின்றன.
- இதில் 182 கண்ணிகளும், ஒரு வெண்பாவும் உள்ளன.
- ஒப்புமை நூல்
- உமாபதி சிவாசாரியார் என்பவர் நெஞ்சுவிடு தூது என்னும் நூல் பாடியுள்ளார். இது பலராலும் போற்றப்படும் நூல்களில் ஒன்று. தத்துவராயரின் இந்த நெஞ்சுவிடு தூது உமாபதி சிவாசாரியார் பாடிய நெஞ்சுவிடு தூது நூல் அமைப்பினைப் போலவே உள்ளது.
செய்தி
- தென்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்கினார் என்பது போன்ற செய்திகள் இதில் உள்ளன.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005