தந்தை பெரியார் அரசு பொறியியற் கல்லூரி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
தந்தை பெரியார் அரசு பொறியியற் கல்லூரி(Thanthai Periyar Government Institute of Technology) இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள வேலூரின் பாகாயம் என்ற பகுதியில் அமைந்துள்ள ஓர் அரசு கல்வி நிறுவனமாகும். 1990 ஆம் ஆண்டு சூலை மாதம் இது தொடங்கப்பட்டது.
தமிழ் நாடு அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இப் பொறியியல் கல்லூரி இயங்குகிறது. முழுமையாக தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் ஆறு பொறியியல் கல்லூரிகளில் இக்கல்லூரியும் ஒன்றாகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியற் கல்லூரிகள் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[1]a. தந்தை பெரியார் அரசு பொறியியற் கல்லூரி ஐந்தாவது மண்டலத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஐந்து பொறியியல் கல்லூரிகளுக்கு மண்டல அலுவலகமாகவும் இது இயங்குகிறது.
த.பெ.பொ.க. நிறுவனத்தில் மாணவர்களுக்கு தேவையான ஆய்வுக்கூடம் மற்றும் கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பயிற்சி பெற்ற பேராசிரியர்களால் தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 454 கல்லூரிகளில் தந்தைப் பெரியார் பொறியியற் கல்லூரி தரவரிசையில் 44 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. [2] இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் அறிவுசார்ந்த மற்றும் கூடுதல் கல்விசார் செயல்பாடுகளிலும் சிறந்த இடத்தைப். பெற்றள்ளனர். இக்கல்வி நிறுவனம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு வினால் அங்கிகாரம் பெற்றுள்ளது.
அமைவிடம்
தொகுதந்தை பெரியார் கல்லூரி வேலூரில் பாகாயத்தை சுற்றி அமைந்துள்ளது. இது சென்னையிலிருந்து மேற்கே 130 கிலோமீட்டர் தொலைவிலிலும், மற்றும் பெங்கலூருக்கு கிழக்கே 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விரண்டு நகரங்களையும் இணைக்கும் பேருந்துகள், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுகிறது. இக் கல்லூரியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் காட்பாடி இரயில் நிலையம் அமைந்துள்ளது. இரயில் நிலையத்திலிருந்து நேராக சென்னை, பெங்கலூர் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் செல்ல முடியும். இக்கல்லூரிக்கு அருகிலுள்ள விமான நிலையம் சென்னை விமான நிலையம் ஆகும். தந்தை பெரியார் அரசு கல்லூரி மாணவர்களுக்கு வேலூரில் கிடைக்கும் வளங்களைக் கொண்டு, பல்வேறு திறமைகளை வளர்த்து கல்லூரி வளாகத்தின் வாய்ப்புகள் ஏற்படுத்தி தருகிறது. குறிப்பாக இயந்திர பொறியாளர் மாணவர்களுக்கான தேவைப்படும் விரிவான ஆய்வக வசதிகளைச் செய்துதருகிறது. வேலூர் மாநகரப் பேருந்துகளான எண் 1 மற்றும் 2 கல்லூரியையும் காட்பாடி இரயில் நிலையத்தையும் இணைக்கிறது.
படிப்புகள்
தொகுஇளநிலை பொறியியல் படிப்புகள்
தொகுஇயந்திரவியல்,கட்டிடவியல்,மின்னனு மற்றும் தொடர்புத்துறை, மின் மற்றும் மின்னணுவியல், கணினியியல்
முதுகலை பொறியியல் படிப்புகள்
தொகுபயன்பாட்டு மின்னணு,உற்பத்தி பொறியியல்,எம்.சி.எ
பகுதி நேர படிப்புகள்
தொகுஉற்பத்தி பொறியியல் பயன்பாட்டு,மின்னணுவியல் ,எம்.சி.எ. பொறியியல் இயந்திரவியல்
வேலைவாய்ப்பு செல் கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துவருகிறது. அனைத்து துறையிலிருந்தும் மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இக் கல்லூரி தேசிய அங்கிகாரம் பெற்ற தேசிய வாரியம், புதுடெல்லியின் அங்கிகாரம் பெற்றுள்ளது. இவ் அங்கிகாரம் கல்லூரியின் வளர்ச்சியைக் காட்டுகிறது.
இயந்திரவியல் பொறியியல்
தொகுஇயந்திரவியல் பொறியியல் துறை 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்துறை கல்லூரி வளாகத்தில் தனிப்பிரிவாக 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இயந்திரவியல் துறையில் ஒப்புதல் பெற்ற 13 பேராசிரியர் பதவிகள் உள்ளன. அதில் ஒரு பேராசிரியர், மூன்று உதவி பேராசிரியர்கள் மற்றும் ஒன்பது விரிவுரையாளர்கள் உள்ளனர். இத்துறை மாணவர்கள் பலர் தேர்வுகளில் பல்கலைக்கழக தரத்தை பெற்றுள்ளனர்.
தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டுஇத்துறையில் பல்வேறு கருத்தரங்கள், விருந்தினர் சொற்பொழிவுகள், பட்டறைகள் மற்றும் மாநாடுகள் பொன்றவை நடத்தப்பட்டன. இயந்திரவியல் துறையில் நல்ல ஆயுதம் ஆய்வகங்கள் மற்றும் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டுள்ளது. மேலும் சின்சி இயந்திரங்கள் மற்றும் முன்மாதிரிகளில் ஆலோசனைகளை வழங்குகிறது.
இத்துறையில் இயந்திரவியல் சார்பாக விரிவுரை அல்லாது, விரிவான கற்றல் அணுகுமுறைகளைப் பணிமனைகள் மூலமாகவும், சோதனைகள், கருத்தரங்கள், தொழிற்பயிற்சிகள், திறமையான தொழில்நுட்பங்கள், தொழிற்சாலை நுட்பங்களை பார்வையிடுதல், காகித விளக்கப் படங்கள் மற்றும் செயல்திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மின்னனு மற்றும் தொடர்புத்துறை பொறியியல்
தொகுமின்னனு மற்றும் தொடர்புத்துறை பொறியியல் துறை 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மின்னனுத் துறை தேசிய அங்கிகாரம் பெற்ற தேசிய வாரியத்தின் அங்கிகாரம் பெற்றது. இத்துறை மாணவர்கள் பலர் தேர்வுகளில் பல்கலைக்கழக தரத்தை பெற்றுள்ளனர். இத்துறை ஊழியக் குழுவினரால் ஆதரிக்கப்பட்டு அதன் உள்கட்டுமான மற்றும் ஆய்வக வசதிகளால் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. மின்னனுத்துறையில் ஒப்புதல் பெற்ற 13 பேராசிரியர் பதவிகள் உள்ளன. அதில் ஒரு பேராசிரியர், நான்கு உதவி பேராசிரியர்கள் மற்றும் ஒரு விரிவுரையாளரும் உள்ளனர். தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் இத்துறையில் அவ்வப்போது பல்வேறு கருத்தரங்கள், விருந்தினர் சொற்பொழிவு பட்டறைகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படுகிறது. இத்துறையில் ஆய்வகங்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
கட்டிடவியல் பொறியியல் துறை
தொகுகட்டிடவியல் பொறியியல் துறை 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. “சுற்றுச்சூழல் நட்புரீதியான கட்டமைப்புகள்” என்ற தலைப்பில் இத்துறை உறுவாக்கப்பட்டது. 1990-91 ஆம் ஆண்டு முதல் நான்கு குழுமாணவர்கள் தேர்ச்சி பெற்றுவெளியேறினர். இத்துறை மீண்டும் 2004-05 ஆம் ஆண்டு முதல் திரும்ப ஆரம்பிக்கப்பட்டது. கட்டிடவியல் துறையில் ஒப்புதல் பெற்ற 13 பேராசிரியர் பதவிகள் உள்ளன. அதில் ஒரு பேராசிரியர், மூன்று உதவி பேராசிரியர்கள் மற்றும் ஒன்பது விரிவுரையாளரும் உள்ளனர்.
மேலும் இந்த இளங்கலை திட்டம், இத்துறையில் பல்வேறு ஆலோசனை திட்டங்களையும், சோதனைச் சேவைகளைப் பல்வேறு துறைகளான கட்டமைப்பு பொறியியல், நீராதாரப் பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், பூகோள தொழில்நுட்ப பொறியியல், ஆய்வுகள் நடத்துகின்றன. மேலும் அரசு,பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உபகரணங்கள் மற்றும் மென்பொருள் தயாரிக்கவும் உதவுகிறது.
இத்துறை வலுவூட்டப்பட்ட கான்கீரீட் கட்டிடம் 2433 சதுர அடி அளவில் கட்டப்பட்ட கட்டிடத்தில் 2008 ஆம் ஆண்டு முதல் இயங்க ஆரம்பித்தது மேலும் மேல் கூரையிடப்பட்ட கட்டுமான ஆய்வுக்கூடம் 400 சதுர அடி அளவில் கொண்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி திறமையை வளர்க்கும் விதமாக அவ்வப்போது பல்வேறு கருத்தரங்கள், சிறப்பு விருந்தினர் சொற்பொழிவு பட்டறைகள் மற்றும் மாநாடுகள்போன்றவற்றை நடத்துகிறது. இத்துறை சிறந்த ஆய்வுக்கூடங்கள் மற்றும் ஆசிரியக் குழுக்களைக் கொண்டுள்ளது..
மேலும் அறிய
தொகுதமிழ் நாடு அரசு கல்வி நிறுவனங்கள் தமிழ் நாடு அரசு பொறியியல் கல்லூரிகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Zone Wise Colleges - Anna University". www.annauniv.edu. Archived from the original on 2010-05-27. பார்க்கப்பட்ட நாள் 2010-06-06.
- ↑ "Rank List of Engineering Colleges in Tamilnadu 2008". பார்க்கப்பட்ட நாள் 2010-06-06.
- ↑ "Courses Zone Wise Anna University". www.annauniv.edu. Archived from the original on 2010-05-27. பார்க்கப்பட்ட நாள் 2010-06-06.