ஒரு தனிநபர் (individual) என்பது ஒரு தனித்துவமான உள் பொருளைக் குறிப்பதாகும். தனிமனிதத்தன்மை (அல்லது சுய-உரிமை) என்பது ஒரு தனிநபராக வாழும் நிலை அல்லது தரமாகும். குறிப்பாக, மனிதர்களைப் பொறுத்தவரை, மற்றவர்களிடமிருந்து தனித்துவமான ஒரு நபராக, ஒருவரின் சொந்தத் தேவைகள் அல்லது குறிக்கோள்கள், உரிமைகள், பொறுப்புகளைக் கொண்டவராவார். ஒரு தனிநபரின் கருத்து உயிரியல், சட்டம், தத்துவம் உள்ளிட்ட பல துறை அம்சங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு நாகரிகத்தின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார். சமூகம் என்பது மனித நடத்தைகள், அணுகுமுறைகள், கருத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களால் வடிவமைக்கப்பட்டு தாக்கமடையும் ஒரு பன்முகக் கருத்தாகும். மற்றவர்களின் கலாச்சாரம், ஒழுக்கநெறிகள் மற்றும் நம்பிக்கைகள், சமூகத்தின் பொதுவான திசை மற்றும் பாதை அனைத்தும் ஒரு தனிநபரின் செயல்பாடுகளில்ல் தாக்கமேற்படுத்தி வடிவமைக்கப்படலாம்.[1]

சொற்பிறப்பியல்

தொகு

15 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்தைய காலத்திலிருந்து (இன்று புள்ளிவிவரங்கள் மற்றும் மீவியற்பியல் துறைகளுக்குள்) தனிநபர் என்பது "பிரிக்க முடியாதது" என்று பொருள்படும், இது எண் ரீதியாக பொதுவாக ஒரு பொருளை விவரிக்கிறது, ஆனால் சில நேரங்களில் "ஒரு நபர்" என்று பொருள்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டிலிருந்து, ஒரு தனிநபர் என்பது தனிமனிதவாதத்தைக் குறிக்கிறது.[2]

சட்டப்படி

தொகு

தனிநபர் மற்றும் தனிமனிதவாதம் என்பது பொதுவாக வயது/நேரம் மற்றும் அனுபவம்/செல்வத்துடன் முதிர்ச்சியடைவதாக கருதப்பட்டாலும், வயது வந்த பகுத்தறிவுள்ள மனிதர் பொதுவாக அரசால், சட்டத்தில் ஒரு "தனிப்பட்ட நபர்" என்று கருதப்படுகிறார்.

தத்துவம்

தொகு
 
தனிநபர்கள் கூட்டத்திலிருந்து தனித்து நிற்கலாம் அல்லது அதனுடன் கலக்கலாம்.
 

மேற்கோள்கள்

தொகு
  1. "Evaluate the role of an individual in the development of any society". பார்க்கப்பட்ட நாள் 8 May 2023.
  2. Abbs 1986, cited in Klein 2005, pp. 26–27

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிநபர்&oldid=4071183" இலிருந்து மீள்விக்கப்பட்டது