தனிப்பூண்டு

,

தனிப்பூண்டு
Single clove garlic
இனம்Allium sativum
பயிரிடும்வகைAny
தோற்றம்யுன்னான்
தண்டுலங்கள்
பல மொழிகளில் இப்பெயருள்ள இப்பூண்டு பொட்டலம்

தனிப்பூண்டு (Solo garlic, single clove garlic, chinese garlic, monobulb garlic, single bulb garlic அல்லது pearl garlic[1]) என்பது வெள்ளைப்பூண்டு (Allium sativum) வகைகளில் ஒன்றாகும்.[2] இதன் தாயகம் சீனா ஆகும். இப்பூண்டின் ஒரு பூண்டுப் பல்லின் விட்டம் / அகல அளவு 25 முதல் 50 மில்லிமீட்டர் என வேறுபட்டு உள்ளது. இது பூண்டு மணம் உடையதாக இருந்தாலும், கொஞ்சம் இதன் மணம் நடுத்தரமாக உள்ளது. அதோடு கொஞ்சம் நறுமணத்தையும் கொண்டதாக உள்ளது. இப்பூண்டு தோல் வெங்காயம் போன்று இளஞ்சிவப்பு கோடுகளுடன் உள்ளதால், உரிப்பதற்கு எளிதாக இருக்கிறது. இது தென்மேற்கு சீன மலைவாழ் மக்களிடம் தோற்றுவிப்பாக இருக்கலாமென்று கருதப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Alex, Renton (8 October 2013). "The best garlic varieties: a guide". தி கார்டியன். https://www.theguardian.com/lifeandstyle/wordofmouth/2013/oct/08/best-garlic-varieties-lidl-peel-cloves. பார்த்த நாள்: 21 January 2017. 
  2. Official Journal of the European Union C 201, 23/07/2010: Explanatory Notes to the Combined Nomenclature of the European Communities (PDF), retrieved 30 சனவரி 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிப்பூண்டு&oldid=3903904" இலிருந்து மீள்விக்கப்பட்டது