தனிமனித உரிமை

தனிமனித உரிமை குழுக்களுக்கான உரிமையிலிருந்து வேறுபட்டுத் தனி மனிதர்களுக்கு உள்ள உரிமையைக் குறிக்கிறது. தனிமனித உரிமை சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் அனுமதி ஆகும். இயல்பு உரிமைக் கோட்பாடுகள் பொதுவாகத் தனிமனித உரிமைகளைப்பற்றியும், குழு உரிமைகள் பொதுவாக சட்ட உரிமை தொடர்பிலுமே பேசப்பட்டு வந்தபோதிலும், இயல்பு உரிமை, சட்ட உரிமை ஆகிய இரண்டும் தொடர்பான கருத்துருக்கள் தனிமனித உரிமை, குழு உரிமை என்பவற்றை வேறுபடுத்தியே கருத்தில் எடுத்துக்கொள்கின்றன.

தனிமனித உரிமைகளின் மேம்பாட்டை முன்னெடுப்பதற்காக புரூசு சினியர் என்பவர் உருவாக்கிய சின்னம்.

தனிமனித உரிமைகளுக்காக வாதிடுபவர்கள், அரசுகள் தனிமனிதருடைய இயல்பு உரிமைகளைப் மறுப்பதைத் தடுப்பதற்காக கூடுதலான சட்டங்கள் ஆக்கப்படவேண்டும் எனக் கோருகின்றனர். இது தாராண்மையியத்துடன் தொடர்பானது.

மேற்கு நாடுகளில் தனிமனித உரிமை என்பது சமுதாயக் கட்டுப்பாடு என்பதுடன் தலைகீழ் விகிதத் தொடர்பு கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அதாவது சமூகக் கட்டுப்பாடு கூடுதலாக இருக்கும்போது, தனிமனித உரிமைகள் குறைவாகக் காணப்படுகின்றன. ஆனால் சீனா போன்ற நாடுகளில் தனிமனித உரிமைகள், சமூகக் கட்டுப்பாட்டைத் திறமையாகச் செயல்படுத்த உதவுகின்றன என்ற நோக்கைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தனிமனித உரிமைகளும் அரசமைப்புச்சட்டமும்

தொகு

பல நாடுகள் தமது அரசமைப்புச் சட்டங்களில், தனிமனித உரிமைகளைச் சேர்த்திருக்கின்றன. எனினும் இவை அனைத்துமே இதற்கான விதிகளை நியாயமாகச் செயல்படுத்துவது கிடையாது. பெயரளவுக்கே தனிமனித உரிமைகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிமனித_உரிமை&oldid=2718641" இலிருந்து மீள்விக்கப்பட்டது