தனிமையின் நூறு ஆண்டுகள் (நூல்)
தனிமையின் நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude) என்னும் இந்தப் புத்தகம் கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் என்ற கொலம்பிய எழுத்தாளரால் ஸ்பானிஷ் மொழியில் 1967இல் எழுதப்பட்ட Cien años de soledad என்ற நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகும். இந்நூல் அதிகாரப்பூர்வமாக 37 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு இருக்கிறது. ஜூன் 2013 இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலுக்காக மார்க்கேசுக்கு 1982ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
தமிழ் மொழிபெயர்ப்பு அட்டை | |
நூலாசிரியர் | கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் |
---|---|
உண்மையான தலைப்பு | Cien años de soledad |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழிபெயர்ப்பு |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | காலச்சுவடு (தமிழில்) |
வெளியிடப்பட்ட நாள் | 2013 |
ஆங்கில வெளியீடு | 1970 |
OCLC | (ஆங்கிலம்) 17522865 |
"கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் வெளிவந்தவற்றில் மகத்தான படைப்பு தனிமையின் நூறு ஆண்டுகள்" என்கிறார் சல்மான் ருஷ்டி.
ஹோசே அர்க்காத்தியோ புயேந்தியா என்பவர் வெகு சில குடும்பங்களை அழைத்துக் கொண்டு நாடோடியாக அலைந்து மகாந்தோ என்னும் ஊரை உருவாக்குகிறார். ஹோசே அர்க்காத்தியோ புயேந்தியாவின் குடும்பத்தோடு சேர்ந்து மகோந்தோ கிராமமும் நகரமாக வளர்கிறது. அவரது குடும்பத்தைப் போலவே, அந்த நகரத்துக்கும் சிக்கல்கள் வருகின்றன. அந்தக் குடும்பத்தின் ஏழு தலைமுறை சந்ததியினர்கள் வழியாக இந்த நகரத்தின் கதையும் சொல்லப்படுகிறது.
மார்க்கேசால் செழுமைப்படுத்தப்பட்ட மாய யதார்த்த வகையைச் சேர்ந்ததாக இந்த நாவல் அமைந்திருக்கிறது.
மேற்கோள்கள்
தொகு