தனி அலுவலர்
தனி அலுவலர் (Special Officer), உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகத்தை, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது கூட்டுறவு சங்க உறுப்பினர்களால் தேர்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் மேற்கொள்ள இயலாத காலங்களில், உள்ளாட்சிகள் மற்றும் கூட்டுறவு கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகத்தை வழிநடத்த தமிழ்நாடு அரசுச் சட்டங்களின் மூலம் நியமிக்கப்படும் அரசு அலுவலர் ஆவார். [1] [2]
கூட்டுறவு நிறுவனங்களில்
தொகுகூட்டுறவு நிறுவனங்களை நிர்வகிக்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு இல்லாத பொழுது, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், ஆண்டு 1983 [3] மற்றும் விதிகளின் படி, தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு தனி அலுவலர் என்ற பதவியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
பதவிக்காலம்
தொகுஉள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தேடுக்கப்படும் வரையிலும்; கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக் குழு அமையும் வரையும், தமிழ்நாடு அரசு நியமித்த இத்தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அரசாணைகளின் மூலம் நீட்டிக்கப்படும். [4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ TN notifies appointment of special officers to rural local bodies
- ↑ "உள்ளாட்சிக்கு தனி அலுவலர் நியமனம்". Archived from the original on 2021-10-21. பார்க்கப்பட்ட நாள் 2017-03-05.
- ↑ "The Tamil Nadu Cooperative Societies Act, 1983". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-05.
- ↑ கூட்டுறவு சங்க தனி அலுவலர் பதவிகாலம் 6 மாதம் நீட்டிப்பு : சட்டசபையில் மசோதா தாக்கல்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ கூட்டுறவு சங்க தனி அலுவலர் பணிகால நீட்டிபிற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு
வெளி இணைப்புகள்
தொகு- Appointment of Specital Officers to Town Panchayats
- Appointment of Specital Officers to City Municipal Corporations
- Appointment of Specital Officers to Municipalities
- Ordinances for appointing special officers for local bodies notified</ref>
- TN government told to appoint special officers for local bodies until election gets over