தனி மனித வருமானம்

ஒரு நாட்டின் அல்லது ஒரு ஆட்சிப் பகுதியின் மொத்த தேசிய உற்பத்தி அங்கு வாழும் அனைவருக்கும் சமமாக பிரிக்கப்பட்டால் ஒருவர் எவ்வளவு பெறுவார் என்பதை சுட்டும் ஒரு பொருளாதார அளவுகோலே தனி மனித வருமானம் ஆகும். இது மக்களிடையே இருக்கும் ஏற்றத் தாழ்வை கணக்கில் எடுக்காததால் மிகவும் மட்டுப்படுத்தப்பட ஒரு அளவுகோலே. எனினும் மொத்த அளவுடன் ஒப்புடுகையில் இது கூடிய துல்லியம் தரக் கூடியது. எடுத்துக்காட்டாக மொத்த தேசிய உற்பத்தி (nominal) இந்தியா $1,098,945 மில்லியன் தொகையுடன் 12 இடமாக வருகிறது. தனி மனித வருமானத்தை கருத்தில் கொள்ளும் பொழுது 965 டொலர்களுடன் 135 இடத்துக்கு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனி_மனித_வருமானம்&oldid=2830671" இலிருந்து மீள்விக்கப்பட்டது