மொத்த தேசிய உற்பத்தி

மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டினரால் உற்பத்தி செய்யப்பட்ட பணிகள் அல்லது பண்டங்களின் மொத்த இறுதி சந்தை மதிப்பாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி போல ஒரு எல்லைக்குள் உள்ளவர்களை எல்லாம் கணக்கில் எடுப்பதில்லை, மாறாக எங்கிருந்தாலும் அந்நாட்டினரின்(வசிப்பவர் மற்றும் புலம்பெயர்ந்தவர்) உற்பத்தியைக் கணக்கில் எடுக்கப்படும். வெளிநாட்டு முதலீடுகள் மூலம் ஈட்டிய லாபமும் சேர்க்கப்படும்.

கணக்கிடும் முறை

தொகு

ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே கணைக்கில் கொள்ளப்படும், பழையப் பொருட்கள் விற்பனையை கணக்கில் கொள்ளாது. ஒரு பொருள் நுகர்வோரை அடையும் முன் சந்தையில் பெறப்படும் இறுதி விலையை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். அதாவது சில்லரை விற்பனை விலை, இடைத்தரகர் விற்பனை விலை கொள்முதல் விலை முதலிய விலைகளை எடுத்துக்கொள்ளாது[1]

மொத்த தேசிய உற்பத்தி = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி) + (வெளிநாட்டு வரவு - வெளிநாட்டு செலவு)

  • வெளிநாட்டு வரவு என்பது இந்நாட்டினர் செய்த வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பெற்ற வெளிநாட்டு ஊதியங்கள்
  • வெளிநாட்டு செலவு என்பது இந்நாட்டில் வெளிநாட்டினர் செய்த முதலீடுகள் மற்றும் பெற்ற இந்நாட்டு ஊதியங்கள்

மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது அந்நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்பட்ட (பண்டம்/பணி) மதிப்பாகும். மொத்த தேசிய உற்பத்தி என்பது அந்நாட்டினர் உற்பத்தி செய்யப்பட்ட(பண்டம்/பணி) மதிப்பாகும். முன்னவை அந்நாட்டில் வெளிநட்டினார் செய்த உற்பத்தியை சேர்க்கும். பின்னவை வெளிநாட்டில் அந்நாட்டினர் செய்த வருமானத்தையும் சேர்க்கும்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கப் பயன்படும் ஒரு அளவீடாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மூலம் நாட்டின் பொருளாதாரத்தைக் கணக்கிடுவதற்கு முன் ஐக்கிய அமெரிக்கா இதனைப் பயன்படுத்திவந்தது.

மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் [2]

தொகு
தரவரிசை 2010 ($ மில்லியன்களில்) 2009 ($ மில்லியன்களில்) 2008 ($ மில்லியன்களில்)
1   ஐக்கிய அமெரிக்கா 14,600,828   ஐக்கிய அமெரிக்கா 14,223,686   ஐக்கிய அமெரிக்கா 14,506,142
2   சீனா 5,700,018   சீனா 4,857,623   சப்பான் 4,853,005
3   சப்பான் 5,369,116   சப்பான் 4,785,450   சீனா 4,042,883
4   செருமனி 3,537,180   செருமனி 3,473,814   செருமனி 3,504,510
5   பிரான்சு 2,749,821   பிரான்சு 2,750,418   ஐக்கிய இராச்சியம் style="text-align:right"|2,799,960
6   ஐக்கிய இராச்சியம் style="text-align:right"|2,399,292   ஐக்கிய இராச்சியம் style="text-align:right"|2,538,578   பிரான்சு 2,700,770
7   இத்தாலி 2,125,845   இத்தாலி 2,114,668   இத்தாலி 2,115,482
8   பிரேசில் 1,830,392   பிரேசில் 1,563,126   எசுப்பானியா 1,449,186
9   இந்தியா 1,566,636   எசுப்பானியா 1,472,046   கனடா 1,446,669
10   கனடா 1,483,274   இந்தியா 1,405,064   பிரேசில் 1,433,699

மேற்கோள்கள்

தொகு
  1. இன்வஸ்டோபீடியா
  2. [1]

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொத்த_தேசிய_உற்பத்தி&oldid=4062505" இலிருந்து மீள்விக்கப்பட்டது