தனேகஷிமா விண்வெளி மையம்
"தனேகஷிமா விண்வெளி மையம்" (Tanegashima Space Center (種子島宇宙センター Tanegashima Uchū Sentā?) (種子島宇宙センター Tanegashima Uchū Sentā?) (TNSC)) ஜப்பானின் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சோதனைக்களமாகும். இது கியூஷூ தீவுக்கு 115 கிலோ மீட்டர்கள் தெற்கே அமைந்திருக்கும் "தனேகஷிமா" தீவில் நிறுவப்பட்டுள்ளது. சப்பானிய தேசிய விண்வெளி மேம்பாட்டு முகமை நிறுவப்பட்டபோது 1969-இல் இம்மையமும் அமைக்கப்பட்டது. தற்போது ஜாக்சாவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இம்மையத்தில் செயற்கைக்கோள்களின் பொருந்துகை, சோதனை, ஏவுதல் மற்றும் பறத்தல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் ஏவூர்தி பொறிகளின் சோதனை முறை எரிதல்களும் இங்கே நடத்தப்படுகின்றன. இதுவே ஜப்பானின் மிகப் பெரிய விண்வெளி மேம்பாட்டு மையமாகும்.
வெளியிணைப்புகள்
தொகு- அலுவல் இணையதளம் (Japanese)
- அலுவல் இணையதளம் (English)
- Introduction
- http://www.astronautix.com/sites/tanshima.htm
- SLR Global Performance Report Card பரணிடப்பட்டது 2010-05-27 at the வந்தவழி இயந்திரம்
- 8866 Tanegashima - asteroid