தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்கள்

நேரடி சமூக சேவை (சனசமூக நிலையம்), ஆபத்துதவி (தமிழர் புனர்வாழ்வுக் கழகம்), தமிழ் மொழி வளர்ச்சி என பல்வேறு நோக்குகளுடன் தமிழ்ச் சூழலில் தன்னார்வலர் திட்டங்களும் அவற்றை செயற்படுத்தும் அமைப்புகளும் இயங்கி வருகின்றன. தற்போது இவற்றுக்கிடையே synergy குறைவு, இருப்பினும் ஆங்காங்கே சில முயற்சிகள் உள்ளன.

அண்மைக் காலத்தில் ஏற்பட்ட தகவல் தொடபாடல் இணையப் புரட்சி தொழிற்துறை உற்பத்தி முறைகளை பெரிதும் மாற்றியமைத்திருக்கிறது. முன்னர் பெரும் நிறுவனங்களே நாளிதழ் நூல்கள் வெளியிடுவதோ, இசை ஆக்குவதோ, இயங்குபடம் ஆக்குவதோ, மென்பொருள் ஆக்குவதோ, ஆராய்ச்சி செய்வதோ சாத்தியமாக இருந்தது. புரட்சிக்குப் பின்னர் பலர் கூட்டாகச் சிறுகச் சிறுகப் பங்களித்து ஒரு பெரும் திட்டத்தை முன்னெடுப்பது சாத்தியமாகியது.

பொதுத் தன்மைகள் அல்லது திட்ட தேவைகள் தொகு

  • திட்டம் சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப்பட வேண்டும். அதாவது Modularize செய்யப்பட வேண்டும்.
  • பயனர்கள் இலகுவாக இணைந்து பங்களிக்க ஏதுவாக இருக்க வேண்டும்.
  • ஓரளவு தன்னொழுங்கு தேவை. இயன்றளவு அதிகார அடுக்குமுறையை மட்டுப்படுத்த வேண்டும். ஆனால் திட்டம் வளர வளர அதிகார அடுக்குமுறை அதிகரிக்கும் என்பது இயல்பே.
  • முதலில் நண்பர்களிடேயான அமைப்பாக இயங்கி, பின்னர் நிறுவனப்படுத்தலை நோக்கி நகரும்.
  • பொறுப்புகள் அடிப்படியிலான அதிகாரமும், சுழற்சி முறையில் பொறுப்புக்களும் வழங்கப்பட வேண்டும்.
  • பேண்தகு நிலையை நோக்கி நகர வேண்டும்.
  • நோக்கம், கொள்கை, முடிவெடுக்கும் முறை, முரண்பாடு தீர்வு முறை ஆகியவற்றில் தெளிவு வேண்டும்.
  • திட்ட எல்லைகள், திட்ட வளங்களைச் சரிவர கணித்துக் கொள்ள வேண்டும்.
  • முடிவுகளை ஆவணப்படுத்த வேண்டும்.
  • அந்த முடிவுகளில் இருந்து எழும் திட்டத்தின் நோக்கங்கள் விவரித்து, பொறுப்பாளர்களை அடையாளப்படுத்தி, கால தேவையை வரையறுத்து, அதற்குரிய வளங்கள் குவித்து, சிக்கல்கள் எழுந்தால் எப்படி தீர்ப்பது என்பது குறித்தான புரிந்துணர்வு தேவை.

திட்ட பட்டியல் தொகு

பொறுப்புகள் தொகு

  • பங்களிப்பாளர்கள்
  • திட்ட ஒருங்கிணைப்பாளர்
  • தொடர்பாளர்
  • நுட்ப வல்லுநர்
  • நிருவாகிகள்
  • பொருளாளர்
  • நிதி சேகரிப்பாளர்

இவற்றையும் பாக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு