தற்காலத் தமிழ்ச் சங்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ் மொழியை, பண்பாட்டை, சமூகத்தை பாதுகாத்து, பகிர்ந்து, கொண்டாடி, மேம்படுத்தி, வளர்ப்பதை நோக்காக கொண்டு உலகமெங்கும் தமிழர்கள் வசிக்கும் ஊர்களில் ஏற்படுத்தப்படும் ஒர் அமைப்பே தமிழ்ச் சங்கம் ஆகும். இச்சங்கம் பொதுமக்களாலேயே, அனைவரையும் உள்வாங்கும் மனப்பாங்குடன் அமைக்கப்படுகின்றது. பொதுவாக தமிழ்ச் சங்கம் இலாப நோக்கு இல்லாமலும், சமய, சாதி, வர்க்க சார்பு அற்றதாகவும், தீவர அரசியல் நோக்குகள் அற்றதாகவும் அமையும்.
குறிப்பாக வெளிநாடுகளில் அமைக்கப்படும் தமிழ் சங்கங்கள் தமிழர்கள் எங்கிருந்து ஒர் ஊருக்கு வந்தாலும், தமிழ் என்ற பொது அடிப்படையில் தமிழ் சங்கத்தை அமைப்பர். இருப்பினும் ஒரே ஊரில் சில வேறுபாடுகள் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சங்கங்கள் அமைவதும் உண்டு.
தற்காலத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புலவர்களை பெரும்பாலும் கொண்டு அரசர்களால் அமைக்கப்பட்ட பண்டைத் தமிழ்ச் சங்களில் இருந்து வேறுபட்டது. பண்டைத் தமிழ்ச் சங்கங்கள் தமிழை ஆய்வதற்கு, இலக்கிய படைப்புக்களை வெளிப்படுத்துவதற்கு களமாக அமைந்தன. அரசர்கள் அல்லது செல்வந்தர்கள் அச் சங்கங்களை ஆதரித்தமையால் படைப்புக்கள் பெரும்பாலும் அவர்களை மகிழ்விக்கும் இன்பவியல் இலக்கியங்களாகவோ அல்லது புகழ்ச்சி இலக்கியங்களாகவோ அமைந்தன. தற்காலத் தமிழ் சங்கங்கள் ஒரு சனசமூக அமைப்பாக, பொதுமக்களைப் பெரும்பாலும் உள்வாங்கி, முன்னிறுத்தி, பொது மக்களாலேயே கட்டமைக்கப்படுகின்றன. தற்காலத் தமிழ்ச் சங்கங்கள் கீழிருந்து எழும் அமைப்புகளாகவே இருக்கின்றன.
தமிழ்ச் சங்க கட்டமைப்பு
தொகுஅனேக தமிழ்ச் சங்கங்கள் பொதுவான ஒரு கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. ஒரு தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களையும், கட்டமைப்பையும், செயல் முறைகளையும் அதன் அமைப்பு யாப்பு அல்லது அமைப்பு விதிமுறைகளில் விபரிக்கப்பட்டிருக்கும். அமைப்பு விதிமுறைகளில் சங்கத்தைப் பற்றிய பின்வரும் விடயங்கள் தெளிவாக்கப்பட்டிருக்கும்.
- பெயரும் பணிமனையும்
- நோக்கங்களும் குறிக்கோள்களும்
- உறுப்பாண்மை
- நிர்வாகக் குழு (முகாமை)
- செயற் குழு
- பணிக் குழுக்கள்
- கூட்டங்கள்
- முடிவெடுக்கும், முரண்பாடுகள் தீர்க்கும் முறைகள்
- வரவு-செலவு முறைமைகள்
- அமைப்பு விதிகளை வரையறை செய்வது, மாற்றுவது பற்றி
சங்கத்தின் மைய செயற்பாடுகளை செயற்குழுவே மேற்கொள்ளும். பொதுவாக ஒரு செயற்குழுவில் பின்வரும் பணியாளர்கள் இருப்பர்.
- தலைவர்
- உபதலைவர்
- செயலாளர்
- பொருளாளர்
- தொடர்பாளர்
- ஒருங்கிணைப்பாளர்
- ஆலோசகர்
- ஆவணக் காப்பாளர்/பதிவாளர்
- பணிமனை பொறுப்பாளர்
- செயற்குழு பொது உறுப்பினர்கள்
தமிழ்ச் சங்க கொள்கைகள்
தொகுதமிழ் சங்கங்கள் தமிழ், தமிழரை முன்னிறுத்தியும் தமிழர் உள்பிரிவுகளை மட்டறுத்தும் இருக்கின்றன. இவை தொல்காப்பியம், திருக்குறள், மற்றும் ஒவையார், பாரதி போன்றவர்களின் படைப்புக்ளை அடிப்படையாகக் கொண்டன.
நுண்கலைகளே பெரும்பாலும் கற்பிக்கப்பட்டாலும், நாட்டார் கலைகளில் ஈடுபாடும் மீள்ளுருவாக்கமும் ஒரு முக்கிய அம்சமாக அமைகின்றது. கிராமத்து நற் விழுமியங்களும் போற்றப்படுகின்றன.
தமிழ் சங்க செயற்பாடுகள்
தொகு- ஒன்றுகூடல்கள்
- தமிழ் வகுப்புக்கள்
- தமிழர் இணைப்பு (networking)
- தமிழ், தமிழர் எதிர்ப்புகளுக்கு (Anti-Tamil) எதிரான செயற்பாடுகள்
தமிழ்ச் சங்க பணிமனை
தொகு- தகவல் பரிமாற்றம் - bulletin board
- நூலகம் - பத்திரிகைகள் இதழ்கள் வாசிப்பிடம்
- பொருள் பரிமாற்றம் - (CDs, DVDs, இதழ்கள், நூற்கள் போன்ற பொருட்களை பயன்படுத்திய பின்பு இங்க் சேர்த்தால் வேண்டியோர் எடுத்து செல்லலாம்)
- சிறு விழாக்களை, கொண்டாட்டங்களை நடத்த ஒரு பொது இடம்
தமிழ்த் திறமைப் போட்டிகள்
தொகு- தமிழ் - எழுத்து - பார்த்து எழுதல்
- தமிழ் - பேச்சு - மனனம் செய்து பேசுதல்
- தமிழ் - வாசிப்பு
- தமிழ் - சொல்வதெழுதல்
- தமிழ் - எழுத்து (அ...ஃ, க..ன)
- தமிழ் - சொல்லாளுமை (ஒத்த சொல், எதிர்ச்சொல்)
- தமிழ் - சொல்லாளுமை (ஆங்கில சொற்களுக்கு இணைத் தமிழ் சொற்கள்)
- தமிழ் - வரலாறு - கேள்வி பதில்
- தமிழ் - தட்டச்சு
- திருக்குறள் மனனப் போட்டி
- தமிழில் கட்டுரை எழுதுதல்
- கதை சொல்லல்
- தமிழ்க் கவிதை
- சிறுகதை
- தமிழ் நுண்கலை - ஓவியம்
- தமிழ் நுண்கலை - இசை
- தமிழ் நுண்கலை - ஆடல்
- தமிழ் நுண்கலை - யோகாசனம்
- நுட்பம் - பொறி கட்டுதல்
- நுட்பம் - கட்டிட மாதிரி கட்டுதல்
- அறிவியல் - பரிசோதனை
- கணக்கு
போட்டிகள் பொதுவாக 3 வயது, 7 வயது, 9 வயது, 11 வயது, 13 வயது, 15 மேற்பட்டோர், பெரியோர் (20 வயதுக்கு மேற்பட்டோர்) என மேற்கொள்ளலாம்.
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- http://www.richmondtamilsangam.org/
- http://www.chicagotamilsangam.org/ சிக்காகோ தமிழ்ச் சங்கம் (தமிழ்/ஆங்கிலம்)
- http://www.colombotamilsangam.org/ பரணிடப்பட்டது 2007-08-08 at the வந்தவழி இயந்திரம் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
- http://www.gatamilsangam.org/ - (ஆங்கில மொழியில்)
- http://avvaitamilsangam.org/ பரணிடப்பட்டது 2010-06-26 at the வந்தவழி இயந்திரம் அவ்வை தமிழ் சங்கம்