தன்னினக் கவர்ச்சி விசை
தன்னினக் கவர்ச்சி விசை (cohesion) என்பது ஒரே மாதிரியான மூலக்கூறுகளுக்கிடையே உண்டாகும் ஈர்ப்பு விசையாகும். நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று ஏற்படுத்தும் ஐதரசன் பிணைப்பே நீர்த் துளியின் நிலைத்தன்மைக்கு காரணம்.
நீர் மூலக்கூறுகளிடையே தன்னினக் கவர்ச்சி விசை இருந்தாலும் அது பிற பொருட்களுடன் வேற்றினக் கவர்ச்சியிலும் ஈடுபடும். ஆனால் பாதரசமோ தன்னினக் கவர்ச்சி மட்டுமே உடையது. கண்ணாடியில் நீர் ஒட்டும். பாதரசமோ ஒட்டாது. வெப்பநிலைமானியில் பாதரசத்தைப் பயன்படுத்த இதுவும் ஒரு காரணம்.