தன்வினை / பிறவினை வாக்கியங்கள்

தன்வினை / பிறவினை வாக்கியங்கள் என்பன முறையே செய் வினை, செய்ப்பாட்டு வினையமைந்த வாக்கியங்களைக் குறிக்கின்றன.[1]


தன்வினை வாக்கியம்

தொகு

தன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது. வினையின் பயன் எழுவாயை சேரும்.

எடுத்துகாட்டு

தொகு

விமல் உண்டான்.

இவ்வகை வாக்கியத்தில் விமல் என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.

பிறவினை வாக்கியம்

தொகு

ஒரு நபர் ஒரு செயலை பிறரால் அல்லது பிறருக்காக செய்வது.

வினையின் பயன் பிறிதொருவரை அல்லது பிறிதொன்றை அடைதல்

எடுத்துகாட்டு

தொகு

விமல் உண்பித்தான். இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.

  • இவ்வாக்கியத்தில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.

தன்வினை - பிறவினை வருந்துவான் - வருத்துவான் திருந்தினான் - திருத்தினான் அடங்கினான் - அடக்கினான்

  • இவ்வாக்கியத்தில் வல்லொற்று (ட்,ற்) இரட்டித்துப் (ட்ட், ற்ற்) பிறவினை ஆயிற்று.

தன்வினை - பிறவினை ஆடினான் – ஆட்டினான் மாறுவான் - மாற்றுவான்

  • பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.

நட - நடப்பி - நடப்பித்தான் செய் - செய்வி - செய்வித்தான்

  • சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.tamilvu.org/courses/degree/a02. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017. {{cite web}}: Missing or empty |title= (help)[தொடர்பிழந்த இணைப்பு]