தன்வீர் முகையுத்தீன் கில்லானி

பாக்கித்தான் சதுரங்க வீரர்

தன்வீர் முகையுத்தீன் கில்லானி (Tunveer Mohyuddin Gillani) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த சதுரங்க வீரர் ஆவார். 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் நாளன்று இவர் பிறந்தார். 1991, 2004, 2006 ஆகிய ஆண்டுகளில் கில்லானி பாக்கித்தான் நாட்டின் சதுரங்க வெற்றியாளராகத் திகழ்ந்தார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இவர் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.[1]

தன்வீர் முகையுத்தீன் கில்லானி
Tunveer Mohyuddin Gillani
நாடுபாக்கித்தான்
பிறப்பு17 பெப்ரவரி 1969 (1969-02-17) (அகவை 55)
லாகூர், மேற்கு பாக்கித்தான்

2009 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற ஆசிய மண்டல உலக சதுரங்க வெற்றியாளர் போட்டியில் பங்கேற்று விளையாடிய தன்வீர் முகையுத்தீன் கில்லானி எட்டாவது இடத்தைப் பிடித்தார்.[2]

சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் தன்வீர் முகையுத்தீன் கில்லானி பாக்கித்தான் நாட்டின் சார்பாக கலந்து கொண்டு விளையாடியுள்ளார்.[3]

  • 1992, மணிலா 30 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (+6, =1, -5),
  • 2000, இசுதான்புல் 30 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (+3, =5, -4),
  • 2004, Calvià 36 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (+3, =2, -6),
  • 2006, துரின் 37 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (+6, =2, -0) தனிநபர் தங்கம்,
  • 2010, காண்டி-மானிசுக்கு 39 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (+3, =2, -6).

மேற்கோள்கள்

தொகு
  1. "Tunveer Gillani - PAKCHESS". 18 June 2015. Archived from the original on 18 June 2015.
  2. "Chess-Results Server Chess-results.com - ASIAN ZONAL 3.2 CHESS CHAMPIONSHIP". chess-results.com.
  3. "Chess-Results Server Chess-results.com - ASIAN ZONAL 3.2 CHESS CHAMPIONSHIP". chess-results.com.

புற இணைப்புகள்

தொகு