தபன் ராய்சௌத்ரி

இந்திய வரலாற்றாளர்

தபன் ராய்சௌத்ரி (Tapan Raychaudhuri ; 8 மே 1926 - 26 நவம்பர் 2014) பிரித்தானிய இந்திய வரலாறு, இந்தியப் பொருளாதார வரலாறு மற்றும் வங்காள வரலாறு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வரலாற்றாளர் ஆவார்.[1] [2]

தபன் ராய்சௌத்ரி
Tapan Raychaudhuri
நவம்பர் 2009இல் தபன் ராய்சௌத்ரி
பிறப்பு8 மே 1926
கீர்த்திபாசா, பரிசால் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு26 நவம்பர் 2014 (வயது 88)
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
துறைவரலாறு
ஆய்வு நெறியாளர்sசி. சி. டேவிசு
ஜதுநாத் சர்க்கார்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்ஞானேந்திர பான்டே, கௌகர் ரிசுவி
விருதுகள்வாட்டுமுல் பரிசு

தொழில் வாழ்க்கை

தொகு

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இசுலாமிய வரலாறு மற்றும் கலாச்சாரத் துறையில் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிரிட்டனில் இருந்து திரும்பிய பிறகு, இந்திய தேசிய ஆவணக்காப்பகதின் துணை இயக்குநரானார். ஒரு வாசகராகவும் பின்னர் வரலாற்றின் பேராசிரியராகவும், தில்லி பொருளாதாரப் பள்ளியின் இயக்குநராகவும், பேராசிரியராகவும் தில்லி பல்கலைக்கழகஹ்தின் வரலாற்றுத் துறையின் தலைவராகவும் இருந்தார்.[3]

1973 முதல் 1992 வரை நவீன தெற்காசிய வரலாற்றில் ஒரு வாசகராகவும், பின்னர் இந்திய வரலாறு மற்றும் நாகரிகத்தின் ஹோமினெம் பேராசிரியராகவும், 1992 முதல் 1993 வரை ஆக்சுபோர்டில் உள்ள செயின்ட் ஆண்டனி கல்லூரியின் உறுப்பினராகவும் இருந்தார். தான் ஓய்வு பெற்ற பிறகு ஆக்சுபோர்டில் உள்ள செயின்ட் ஆண்டனி கல்லூரியில் சகாவாக இருந்தார்.[4] 2009 ஆம் ஆண்டில்இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகளுக்கு இன்ஃபோசிஸ் பரிசு வழங்கும் நடுவர் குழுவிலும் பணியாற்றினார்.

2011 இல் இந்தியாவில் தேசிய ஆராய்ச்சி பேராசிரியராக ஆனார் [5][6]

இறப்பு

தொகு

பக்கவாதத்தால் சிலகாலம் பாதிக்கப்பட்டிருந்த தபன் ராய்சௌத்ரி, ஆக்சுபோர்டில் உள்ள தனது வீட்டில் 26 நவம்பர் 2014 அன்று இறந்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "A Man of Many Parts". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/lifestyle/books/a-man-of-many-parts. 
  2. "Tapan Raychaudhuri (1926-2014)". எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி. https://www.epw.in/journal/2014/48/glimpses-past-web-exclusives/historical-roots-mass-poverty-south-asia.html. 
  3. "Amartya Sen - Biographical". Nobelprize.org.
  4. "Professor Tapan Kumar Raychaudhuri DPhil, DLitt, Bio". Centre for Research in the Arts, Social Sciences and Humanities, Cambridge University. Archived from the original on 2 October 2013. பார்க்கப்பட்ட நாள் 18 July 2013.
  5. "Economic historian Tapan Raychaudhuri passes away". ஹிந்துஸ்தான் டைம்ஸ். https://www.hindustantimes.com/india/economic-historian-tapan-raychaudhuri-passes-away/story-UvEiXpbR6eXdMSAQarhp8M.html. 
  6. "Smriti Irani picks three professors with saffron tinge for National Research Professorship scheme". இந்தியா டுடே. https://www.indiatoday.in/india/story/smriti-irani-picks-three-professors-with-saffron-tinge-for-national-research-professorship-scheme-230822-2014-12-11. 
  7. "Historian Tapan Raychaudhuri dies". http://bdnews24.com/neighbours/2014/11/27/historian-tapan-raychaudhuri-dies. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபன்_ராய்சௌத்ரி&oldid=4139878" இலிருந்து மீள்விக்கப்பட்டது