தபஸ்ஸம் அத்னன்
தபஸ்ஸம் அத்னன் (Tabassum Adnan) (பிறப்பு 1977) சுவாத் பள்ளத்தாக்கிலிருந்து வந்த பாக்கித்தானின் பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். பாக்கித்தானிய பெண்களுக்கு நீதி தேடுவதில் இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அமெரிக்க வெளியுறவுத்துறையின் 2015ஆம் ஆண்டு சர்வதேச வீரதீர பெண்கள் விருதை வென்றார். [1]
தபஸ்ஸம் அத்னன் | |
---|---|
பிறப்பு | 1977 சுவாத் பள்ளத்தாக்கு, பாகித்தான் |
தேசியம் | பாகிஸ்தானியர் |
பணி | பெண்கள் உரிமை ஆர்வலர் |
செயற்பாட்டுக் காலம் | 2013 - தற்போது வரை |
அறியப்படுவது | பாக்கித்தானில் முதல் பெண் ஜிர்காவை நிறுவினார் |
சுயசரிதை
தொகுதபஸ்ஸம் அத்னன் 1977 இல் பிறந்து பாக்கித்தானின் சுவாத் பள்ளத்தாக்கில் வளர்ந்தார். [2] இவருக்கு 13 வயதிலே திருமணமாகி நான்கு குழந்தைகளுக்கு தாயானார். மேலும், வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டார். இவர் தனது 20 வயதில் கணவரை விவாகரத்து செய்தபோது. வீடற்றவராகவும், ஆதரவு இல்லாமல் இருந்தார். [1]
பணிகள்
தொகுஇவர் ஒரு உள்ளூர் உதவி குழுவால் நடத்தப்படும் பெண்கள் அதிகாரமளித்தல் திட்டத்தில் கலந்து கொண்டார். முடிவெடுக்கும் செயல்முறைகளில் பங்கேற்க பெண்களின் திறனை மாற்றுவதற்கான வேலை செய்ய இது இவருக்கு ஊக்கமளித்தது. ஆரம்பத்தில் இவர் ஆண்கள் மட்டுமே பிரதான சுவாத் அமன் ஜிர்கா எனப்படும் சபையை அணுகினார். ஆனால் நிராகரிக்கப்பட்டார். ஜிர்காக்கள் என்பது பாரம்பரிய முறைசாரா நீதி மன்றங்களாகும். அவை கிசாக்கள், பழிவாங்கும் சட்டங்கள், [3] மற்றும் முறையான நீதி முறைகள் அல்லது காவல் நடைமுறைகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றாலும், பெரியவர்களின் முடிவுகள் சமூக ரீதியாக மதிக்கப்படுகின்றன. மேலும் அவை பெரும்பாலும் நீதித்துறையை பாதிக்கின்றன. [4]
பெண்கள் ஜிர்கா
தொகுமே 2013 இல், அத்னன் தனது சொந்த ஜிர்காவைத் தொடங்கினார். [4] நாட்டில் பெண்கள் முதன்முதலில் இதை வழி நடத்தினர். பாரம்பரியமாக, இப்பகுதியில் பெண்கள் ஆண்களின் தகராறுகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு அதிக சக்தி இல்லாததால், தனது குழு செயல்பட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை அத்னன் உணர்ந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்கும் போது செயல்படுமாறு அவரது 25 உறுப்பினர்களைக் கொண்ட அனைத்து பெண்கள் ஜிர்காகளும் காவல்துறைக்கும் பாரம்பரிய நீதிமன்ற முறைக்கும் அழுத்தம் கொடுக்கிறது. [5]
விருதுகள்
தொகு2013 ஆம் ஆண்டில், அத்னனுக்கு மனிதப் பாதுகாவலர்கள் விருது வழங்கப்பட்டது. [6] 2014 ஆம் ஆண்டில் இவர் என்-அமைதி அதிகாரமளித்தல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். [7] 2015 ஆம் ஆண்டில், இவர் அமெரிக்காவின் சர்வதேச துணிச்சலான பெண்கள் விருதை வென்றார். 2016இல் இவர் நெல்சன் மண்டேலா விருதையும் வென்றுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 she is the best human rights defender awardee in 2014 recently in 2015 she honoured with nelson mandela award for her great work in her area swat "Biographies of 2015 Award Winners". U.S. State Department. March 2015 இம் மூலத்தில் இருந்து 7 மார்ச் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150307040454/http://www.state.gov/s/gwi/programs/iwoc/2015/bio/index.htm. பார்த்த நாள்: 10 March 2015.
- ↑ Majeed, A (11 July 2013). "Pakistan's Women-Only Jirga Fights for Equal Rights". Newsweek Pakistan இம் மூலத்தில் இருந்து 8 மே 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190508043416/http://newsweekpakistan.com/pakistans-women-only-jirga-fights-for-equal-rights/.
- ↑ "Girl wants husband punished for chopping off her nose". Saach TV. July 3, 2014 இம் மூலத்தில் இருந்து 8 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150408094225/http://www.saach.tv/2014/07/03/girl-wants-husband-punished-for-chopping-off-her-nose/.
- ↑ 4.0 4.1 Siddiqui, Taha (March 4, 2014). "World Asia: South & Central In former Taliban fiefdom, Pakistan's first female council tackles abuses". The Christian Science Monitor. http://www.csmonitor.com/World/Asia-South-Central/2014/0304/In-former-Taliban-fiefdom-Pakistan-s-first-female-council-tackles-abuses.
- ↑ Ali, Syed Mohammad (August 8, 2013). "Significance of the female jirga". The Express Tribune. http://tribune.com.pk/story/588473/significance-of-the-female-jirga/.
- ↑ "Tabassum Adnan Khwendo jirga". பார்க்கப்பட்ட நாள் 15 March 2015.
- ↑ "Tabassum Adnan A monumental moment for Pashtun women". N-Peace Network. பார்க்கப்பட்ட நாள் 15 March 2015.[தொடர்பிழந்த இணைப்பு]