தபால் நூதனசாலை, கொழும்பு

தபால் நூதனசாலை, கொழும்பு அல்லது தபால் அருங்காட்சியகம், கொழும்பு (Postal museum, Colombo) என்பது இலங்கையில் அமைந்துள்ள தேசிய தபால் அருங்காட்சியகம் ஆகும். இது இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள தபால்த் திணைக்கள தலைமைக் காரியாலயத்தில் அமைந்துள்ளது. 1918 தொடக்கம் 1925 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மத்திய தந்தி அலுவலகத்தில் (Central Telegraph Office) இவ்வருங்காட்சியகம் இயங்கி வந்தது. பின்னர் 1994 ஆம் ஆண்டில் கொழும்பிலுள்ள பொது அஞ்சலகத்திற்கு அருங்காட்சியகம் இடமாற்றப்பட்டது. மீண்டும் 2010 ஆம் ஆண்டு சூலை மாதம் 6 ஆம் திகதி தேசிய தபால் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.[1] இடச்சுக்காலத் தபால் நிலையங்கள், அரிதான தபாற்தலைகள், உபகரணங்கள், தபாற்பெட்டிகள் பற்றிய அடிப்படைத் தகவல்களை இங்கு அறியலாம்.[2] இலங்கைத் தபால்த் திணைக்களம் பற்றிய படங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[3]

தபால் அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது6 சூலை 2010
அமைவிடம்கொழும்பு, இலங்கை
ஆள்கூற்று6°55′40.9″N 79°51′29.1″E / 6.928028°N 79.858083°E / 6.928028; 79.858083
வகைதபால்
வலைத்தளம்Department of Post

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sri Lanka's snail mail history". Ceylon Today. Archived from the original on 2 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Sri Lanka Post - Our Museum". Department of Post. Archived from the original on 24 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "When pigeons carried mail from place to place". Sunday Times (Sri Lanka). பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபால்_நூதனசாலை,_கொழும்பு&oldid=3737253" இலிருந்து மீள்விக்கப்பட்டது