தமடே (இசைக்கருவி)
தமடே அல்லது தம்டே என்று அழைக்கப்படும் இந்த இசைக்கருவி, தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் பழைய மைசூர் மாநிலத்தில் பயன்படுத்தப்படும் நாட்டுப்புற இசைக்கருவியாகும். இக்கருவி, தமிழ்நாட்டில் இசைக்கப்படும் பறையைப் போலவே தோலால் ஆன மேளக்கருவியாகும்.
இரும்பு வளையத்தில் இறுக்கி கட்டப்பட்ட வட்ட வடிவ மேல் சட்டத்தின் மீது கட்டப்படுள்ள ஆட்டுத் தோலால் ஆன, இந்த மேளக்கருவி, தெற்கு கர்நாடகாவில் உள்ள தலித் சமூகங்களான ஹோலியாக்கள் மற்றும் மாதிகர்கள், போன்றோர்கள் மூலம் இறுதிச் சடங்குகள், கிராம திருவிழாக்கள் மற்றும் அறிவிப்புகளின் போது மட்டுமே இசைக்கப்பட்டது. இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே, இறுதிச் சடங்குகள் மற்றும் தலித்துக்களுடன் தொடர்புடையது[1] என முத்திரைக் குத்தப்பட்ட இக்கருவி, தற்போது, திருமணங்கள், எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களின் போது இசைக்கப்பட்டு, அனைத்து சமூகங்களாலும் கற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. இதைப் பயிற்றுவிக்க பழைய மைசூர் பகுதி முழுவதும் பல்வேறு கலைக்குழுக்கள் உள்ளன. [2]
இக்கருவி பாரசீக பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. மொழிக்குறிப்புகளின் படி, டாம்டே/டாஃப் என்பது சசானிட் ஈரானின் மொழியிலிருந்து பெயரிடப்பட்டிருக்கலாம் எனவும், ஈரானிய பெஹிஸ்துன் குறிப்புகளின் படி, இந்த கருவி இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முந்தையது என்றும் நம்பப்படுகிறது. இஸ்லாமிய மதத்தில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளதோடு சூஃபிஸத்துடன் இக்கருவி தொடர்புடையது. ஈரானில் மத நிகழ்வுகளின் போது இந்த கருவிகள் மூலம் இசை இசைக்கப்படுகின்றன. டாஃப் ஈரானின் ஒரு முக்கிய இசைக்கருவியாகும். மத்திய கிழக்கில் உள்ள குர்திஷ் பெண்களால் அவர்களின் பண்டைய காலங்களில் இசைக்கப்பட்டுள்ளது. இக்கருவியை சுற்றிலும் மணிகளால் அலங்கரித்து, கிரேக்கத்திலும் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "நாட்டுப்புற கருவியுடன் நடனம்".
- ↑ "612 Siddalingaiah, Village deities". பார்க்கப்பட்ட நாள் 2020-06-01.
- ↑ "தம்டே". பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.