தமயந்தி போஷ்ரா

சந்தாளி மொழி எழுத்தாளர்

தமயந்தி போஷ்ரா (Damayanti Beshra) என்பவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்தாளி மொழி எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவருக்கு சாகித்திய அகாதமி வழங்கப்பட்டது. [1] சாந்தாலி மொழியின் முதல் பெண்களுக்கான பத்திரிகையான 'கரம் தார்' என்ற இதழைக் கொண்டுந்தார். 2020ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[2][3]

தமயந்தி போஷ்ரா
பணிஎழுத்தாளர், கவிஞர்
சிறப்புப் பணிகள்Ror. Sanes: Santali Linguistics
வாழ்க்கைத்
துணை/கள்
Gangadhar Hansda
விருதுகள்Sahitya Akademi Award in Santal, இலக்கியம் மற்றும் கல்விக்கான பத்மசிறீ

ஒடிசாவைச் சேர்ந்தவரான தமயந்தி போஷ்ரா, மாநிலத்தில் சிறுபான்மை மக்களால் பேசப்படும் சந்தாளி மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர். பின்தங்கிய பிரிவில் இருந்து வந்த இவர் முனைவர் பட்டப்படிப்புவரை படித்தவர். அச்சில் ஏறாத தனது தாய் மொழியில் தனது முதல் கவிதைத் தொகுப்பான ஜிவி இகமாவை 1994இல் வெளியிட்டார். 2010ஆம் ஆண்டு இவர் எழுதிய சே சிகாடு என்ற கவிதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. உலகுக்கு பெரும்பாலும் அறியப்படாத மொழியாக இருந்த தனது தாய்மொழியான சந்தாளி மொழியில் இதுவரை 11 நூல்களை அச்சில் ஏற்றி பெருமை சேர்த்ததற்காக இவருக்கு 2020ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Sahitya Akademi Meet The Author Damayanti Beshra" (PDF). சாகித்திய அகாதமி. 1 September 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  2. "Odisha's padma prides". The New Indian Express. 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  3. "Arun Jaitley, Sushma Swaraj, George Fernandes given Padma Vibhushan posthumously. Here's full list of Padma award recipients". தி எகனாமிக் டைம்ஸ். 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  4. பதம விருதுகள் : சாதனை படைத்த சாமானியர்கள், எல். ரேணுகாதேவி, இந்து தமிழ் 2020பெப்ரவரி 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமயந்தி_போஷ்ரா&oldid=3895271" இலிருந்து மீள்விக்கப்பட்டது