தமிழக அரசின் இலக்கிய விருதுகள்
தமிழக அரசின் இலக்கிய விருதுகள் என்பது தமிழக அரசின் சார்பில் இலக்கிய வளர்ச்சி, தமிழ் மொழி மற்றும் தமிழ் சமுதாயத்துக்கு தொண்டு செய்தவர்களை தேர்ந்தெடுத்து கொடுக்கப்படும் விருதுகளாகும்.
விருதுகளின் பட்டியல்
தொகுஇவ்விருதானது ஒரு லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை உடையது. [1]
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்
தொகுதமிழக அரசு சித்திரை தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பங்காற்றிய அறிஞர்களே தேர்வு செய்து விருது வழங்குகிறது.[2]
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருது ரூபாய் ஒரு லட்சம் பரிசு தொகையும், ஒரு சவரன் தங்க பதக்கமும் கொண்டது.
- தமிழ்த்தாய் விருது
- கபிலர் விருது
- உ.வே.சா விருது
- கம்பர் விருது
- சொல்லின் செல்வர் விருது
- ஜி.யு.போப் விருது
- உமறுப்புலவர் விருது
- இளங்கோவடிகள் விருது
- அம்மா இலக்கிய விருது
தமிழ்த்தாய் விருது ஆண்டுதோறும் ஒரு அமைப்பினை தேர்ந்தெடுத்து வழங்கப்படுகிறது. அதனால் அந்த அமைப்பிற்கு ரூபாய் ஐந்து லட்சமும் கேடயமும் தரப்படுகிறது.
உலக தமிழ்ச் சங்க விருதுகள்
தொகு- இலக்கிய விருது
- இலக்கண விருது
- மொழியியல் விருது
தமிழ்ச்செம்மல் விருது
தொகுதமிழ்ச்செம்மல் விருது என்பது தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விருதாகும். இந்த விருதிற்கு மாவட்டத்திற்கு ஒரு அறிஞர் தேர்வு செய்யப்படுகிறார்.இவ்விருது இருபத்து ஐந்தாயிரம் ரூபாயும், பாராட்டுரையும் கொண்டதாகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-02-01.
- ↑ https://www.vikatan.com/amp/news/tamilnadu/121104-tn-government-announce-tamil-new-year-awards.html
- ↑ https://www.maalaimalar.com/amp/News/District/2017/04/24151208/1081677/TN-government-announced-Chithirai-tamil-new-year-and.vpf