தமிழர் மானிடவியல்

தமிழ்ச் சமூக களங்களில் இடம்பெறும் மானிடவியல் ஆய்வுகள் தமிழர் மானிடவியல் ஆகும். இத்துறையை முதலில் ஆராய்ந்தவர்கள் ஐரோப்பியர்களே ஆவர். இவ்வாய்வுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலோ அல்லது பிற ஐரோப்பிய மொழிகளிலோ இருந்தன.

பின்னர் தமிழர்களும் மானிடவியல் அணுகுமுறைகளையும், இத்துறையின் கோட்பாடுகளையும் தமிழ்ச் சூழல் கள ஆய்வுகளுக்கு பயன்படுத்தி வருகின்றார்கள். முதலில் தமிழியல், நாட்டரியல் துறைகளிலும் பின்னர் சாதி, சாதியம், சமூக அசைவியக்கம், அலைந்துசூழ்வியல் என பல கள முனைகளிலும் மானிடவியல் பயன்படுகின்றது. [1]

தமிழர் மானிடவியல் பற்றிய ஆய்வுகளுக்கும், தமிழில் மானிடவியல் பற்றிய தகவல்களுக்கும் பக்தவத்சல பாரதியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கவை. அவரின் தமிழர் மானிடவியல், மானிடவியல் கோட்பாடுகள் , " இலங்கை இந்திய மானிடவியல்", "பண்பாட்டு மானுடவியல்" நூற்கள் இத்துறையில் தகுந்த விரிந்த புரிதலை தரவல்லவை.

மேற்கோள்கள்

தொகு
  1. பக்தவத்சல பாரதி. (2005). மானிடவியல் கோட்பாடுகள். புதுவை: வல்லினம் பதிப்பகம்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_மானிடவியல்&oldid=2054637" இலிருந்து மீள்விக்கப்பட்டது