தமிழி (வலைத் தொடர்)


தமிழி என்பது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்திய தமிழ் மொழி ஆவணப்பட வலைத் தொடர் ஆகும், இது ஹிப்ஹாப் தமிழா அவர்களால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த வலைத் தொடரை பிரதீப் குமார் இயக்கியுள்ளார். இந்த தொடரின் எழுத்தாளர் இளங்கோ ஆவார். இது தமிழ் எழுத்து எழுத்தின் பரிணாமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆராய்ச்சி ஆவணப்படத் தொடர். [1] முதல் பாகம் 2 அக்டோபர் 2019 அன்று,ஹிப்ஹாப் தமிழாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மூலம் ஒளிபரப்பப்பட்டது. அதன் இறுதி அத்தியாயம் 22 நவம்பர் 2019 அன்று ஒளிபரப்பப்பட்டது. [2]

தமிழி (வலைத் தொடர்)
வகைஆவணப்படம்
வரலாறு
உருவாக்கம்ஹிப்ஹாப்_தமிழா
எழுத்துஇளங்கோ
திரைக்கதைபிரதீப் குமார்
இயக்கம்பிரதீப் குமார்
முகப்பு இசைஹிப்ஹாப்_தமிழா
பின்னணி இசைஹிப்ஹாப்_தமிழா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்8
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஹிப்ஹாப்_தமிழா
தொகுப்புஸ்ரீஜித் சாரங்
படவி அமைப்புலோகேஷ் இளயா
பாலாஜி பாஸ்கரன்
ஒளிபரப்பு
அலைவரிசையூடியூப்
படவடிவம்1080p
ஒளிபரப்பான காலம்2 அக்டோபர் 2019 (2019-10-02) –
22 நவம்பர் 2019 (2019-11-22)

ஒலிப்பதிவு

தொகு

வலைத் தொடருக்கான விளம்பரப் பாடலை ஹிப்ஹாப் தமிழா எழுதி இசையமைத்தார். அந்தோணி தாசனுடன் இணைந்து பாடினார். யூடியூபில் 21 செப்டம்பர் 2019 அன்று இசைக் காணொளியாகவும் ,அதே நாளில் அனைத்து ஊடக ஓடை தளங்களிலும் தனிப்பாடலாகவும் வெளியிடப்பட்டது. [3]

மேலும் படிக்க

தொகு
  1. Mani (2018-12-11). "எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 'ஹிப்ஹாப்' ஆதி! தமிழி ட்ரெய்லர்!!!". Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-12-30. பார்க்கப்பட்ட நாள் 2018-12-30.
  2. "Tamizhi official playlist". YouTube/HiphopTamizha. பார்க்கப்பட்ட நாள் 2019-11-22.
  3. "Hiphop Tamizha - #Tamizhi (Official Music Video)". YouTube/ Hiphop Tamizha. 21 September 2019. பார்க்கப்பட்ட நாள் 21 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழி_(வலைத்_தொடர்)&oldid=3710874" இலிருந்து மீள்விக்கப்பட்டது