தமிழ்க்கடை

தமிழர் பெரும்பாலும் பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்யும் கடை தமிழ்க்கடை எனப்படும். இந்த சொல்லாடல் தமிழர் குடிபுகுந்து வாழும் மேற்கு நாடுகளிலேயே பெரும்பாலும் வழங்குகிறது. மரக்கறிகள், கடலுணவுகள், பலசரக்குகள், குடிபானங்கள், சமைத்த உணவுகள், சடங்குப் பொருட்கள், இதழ்கள், நூல்கள், திரைப்படங்கள் என பலதரப்பட்ட அன்றாட வாழ்வியலுக்கு அவசியமான பொருடகள் தமிழ்க்கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. உடைகள், நகைகள், தளபாடங்கள், இலத்திரனிய கருவிகள், இதர சேவைகளையும் தமிழ்க்கடைகள் தருகின்றன.


பணமாற்று செய்வது, தொலைபேசி அட்டை விற்பனை, நிகழ்ச்சி அனுமதிச்சீட்டு விற்பனை ஆகியவையும் தமிழ் கடைகளில் நடைபெறும்.

புகலிட தமிழர் சமூகங்களும் தமிழ்க்கடையும்தொகு

தமிழர் புதிதாக ஒரு இடத்துக்கு கணிசமான அளவு குடிபெயர்ந்த பின்பு அவர்களின் தேவைகளை முன்வைத்து தமிழ்கடைகள் தொடங்கப்படுகின்றன. தமக்கு பரிச்சியமான, விருப்பமான பொருட்களை பெற தமிழ்க்கடைகள் உதவுகின்றன. சிறிய தமிழ்ச் சமூகங்கள் இருக்கும் இடங்களில் தமிழ்க்கடைகள் ஒரு சந்திப்பு இடமாகவும் இருக்கின்றன.


பொருள் விற்பனைத் துறை பெரும் கம்பனிகளால் ஆதிக்கப்படிருக்கும் மேற்குநாடுகளில் தமிழ்க்கடை சிறு வியாபாரிகள் அந்த சந்தையின் ஒரு சிறு பிரிவைப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது. எனினும் மக்கள் தொகை உயரும் பொழுது பல தமிழிக் கடைகள் போட்டி போட்டு தொடங்கப்படுகின்றன. சில பெரும் கம்பனிகளாகவும் வளர முடிகிறது. இப்படி நிகழும் பொழுது விற்பனையாளர் வாடிக்கையாளர் தொடர்பு பிற எந்த வணிகத் தொடர்பாடல் போலவே நிகழுகிறது.


இவற்றையும் பாக்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்க்கடை&oldid=2987556" இருந்து மீள்விக்கப்பட்டது