தமிழர் பொருளாதாரம்
பொருளே வாழ்வாதாரம். பொருள் உற்பத்தி முடிவுகள், உற்பத்தி முறைகள், பரிர்ந்தளிக்கும் முறைகள், பண்டமாற்று, நுகர்வு தொடர்பான ஒழுங்கமைப்பை பொருளாதாரம் எனலாம். வரலாற்று, தற்காலத் தமிழரின் பொருளாதாரத்தை தமிழர் பொருளாதாரம் கட்டுரை விபரிக்கும்.
பண்பாடும் பொருளாதாரமும்
தொகுமுதன்மைக் கட்டுரை: பண்பாடும் பொருளாதாரமும்
பொருட்களின் தெரிவு, உற்பத்தி, பகிர்வு அடிப்படையில் ஒரு பண்பாடு சார் செயற்பாடுதான். உடை, உணவு, உறையுள், ஈடுபாடுகள், தொழில்கள், கலைகள், ஊடகம் என அனேகமானவை பண்பாடு தொடர்புடைய செயற்பாடுகள்தான். ஒரு தனிமனிதனுடைய பொருளாதாரம் அவனுடையா முயற்சியை மட்டுமல்லாமல், அவன் சார்ந்துள்ள சமூகத்தையும் சார்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக இன்றைய ஆபிரிக்காவின் தாழ்ந்த பொருளாதர நிலைக்கு, அவர்களது பண்பாடும் ஒரு முக்கிய காரணமாகும்.
1960 களில் ஒரே பொருளாதார நிலையில் இருந்த இலங்கையும் சிங்கப்பூரும் இன்று எதிர் நிலைகளில் நிற்கின்றன. இன்று சிங்கப்பூர் உலகின் பொருளாதார வளம் மிக்க நாடுகளில் ஒன்று. இலங்கை போரினால் சீரழிந்த, கடனில் மூழ்கி இருக்கும் ஒரு நலிந்த பொருளாதாரம் கொண்ட நாடு. சிங்கப்பூரின் அணுகுமுறை தமிழை அலுவல் மொழியாக ஆக்கியது. தமிழையும் அதன் பல்லினப்பண்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாக ஆக்கியது. இலங்கை தமிழரை இரண்டாம் நிலை குடிமக்களாக ஆக்கி, சிதைந்து போனது.
தமிழ்நாடு இன்று இந்தியாவின் வளர்ச்சி மிக்க மாநிலமாக இருப்பதற்கு திராவிட இயக்கம் உந்திய கொள்கைகள் முக்கிய காரணமாகும். பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணுரிமை, இறை மறுப்பு, தொழில்மயமாக்கம் ஆகியவை தமிழ்நாட்டை வளமாக்கின.
வணிகத்துறை நோக்கி தமிழர் அணுகுமுறை
தொகுசங்ககாலம் முதற்கொண்டு வணிகத்தில் தமிழர் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது ஒரு முதுமொழி. இருப்பினும் வணிக சமூகம் பல சமயங்களில் நியாமற்ற முறையில் சுரண்டல் மூலம் செல்வம் ஈட்டி சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் அல்லது சமனற்ற போக்கை பெருகச் செய்யும் போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் "வர்க்க போராட்டத்தில்" ஈடுபட்டு வணிகரை எதிர்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக "உழவர் சமூகத்தைச் சேர்ந்த அப்பர் தலைமையில் தமிழ் நாட்டில் பொதுமக்கள் செல்வம் நிறைந்த வணிகருக்குகெதிராக திரண்டெழுந்ததை" குறிப்பிடலாம்.[1]
பண்டைய தமிழர் வணிகத்தில் சிறந்து சிறப்புற்றினர் எனினும், இந்த பொருளாதார மேன்மை பெரும்பான்மையினருக்கு கிட்டவில்லை.
மூன்றாம் உலகக் குடிகள்
தொகுதற்காலத்தில் பெரும்பாலான தமிழர்கள் மூன்றாம் உலக நாடுகளான இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். ஆகையால் உலகப் பொருளாதார தரத்தில் பெரும்பானமையானோர் ஒரு தாழ்த்தப்பட்ட நிலையிலே உள்ளார்கள். எடுத்துக்காட்டாக முதலாம் உலக நாட்டைச் சேர்ந்த அனேக அமெரிக்கர்கள் ஒரு தானுந்தாவது வைத்திருப்பர், ஆனால் பெரும்பாலான தமிழர்களிடம் அது இல்லை.
தொழில்மயமாக்கம்
தொகுதமிழர்கள் விரைவாக நகரமயப்படுத்தப்பட்டு, தொழில்மயப்படுத்தப்பட்ட வரும் ஒரு இனம். தமிழ்நாடே இந்தியாவில் அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலம்.
வேளாண்மை, மீன்பிடித்தல், கைத்தொழில் ஆகியவையே தமிழரின் முக்கிய தொழில்களாக இருந்தன். இன்றும் கணிசமான தொகையினர் இந்த தொழில்களிலேயே ஈடுபட்டிருக்கின்றார்கள். எனினும் இன்று தொழிற்துறையின் சேவைத்துறையின் வளர்ச்சி துரிதமானது.
கூலிகள்
தொகுஆங்கில காலனித்துவ அரசால் தமிழர்கள் கூலிகளாக இலங்கை, மலேயா, பர்மா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு கூட்டிச் செல்லப்பட்டனர். தொழில்வாய்ப்புக்களை, வசதிகளைக் கவர்ச்சி காட்டியே அழைத்துச் செல்லப்பட்டனர். பெரும்பாலானோர் தேயிலை, ரப்பர் தோட்டக் கூலிகளாக வேலை செய்தார்கள்.
ஈழஅகதிகள்
தொகுஈழப்போராட்டம் காரணமாக மேற்குநாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர் பலர் பொருளாதார அடிமட்டத்திலேயே ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் உணவகங்கள், தொழிற்சாலைகள், வியாபார அங்காடிகள், சுத்தம் செய்யும் சேவை நிறுவனங்கள் ஆகியவற்றில் தொழிலாளிகளாக வேலை செய்கின்றார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் சிறு பொருள் சேவை வியாபார நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகின்றார்கள். பெரும்பான்மையானவற்றை தமிழ்ச் சமூகத்துனுள்ளேயே சந்தைப்படுத்துகின்றார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் மருத்துவம், நிதித்துறை, பொறியியல் போன்ற உயர் தொழில் திறன் வேண்டிய துறைகளில் இயங்கி வருகின்றார்கள்.