தமிழ்நாகை என்கிற கோ. அன்பழகன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினத்தில் பிறந்த இவர் எலும்பு முட நீக்கியல் துறையில் 27 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றியுள்ளார். “கூந்தல் பனை” எனும் கவிதை நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய “வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாகை&oldid=3614135" இலிருந்து மீள்விக்கப்பட்டது