தமிழ்நாடு அரசின் சிறந்த கலை அமைப்பு விருது
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சிறந்த கலை அமைப்புகள்/நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவைகளுக்கு சிறப்புப் பரிசாகக் கேடயம் மற்றும் பரிசுத் தொகைகளைக் கொண்ட விருதினை வழங்கிச் சிறப்பித்து வந்தது. 1973 முதல் 2000 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விருதுக்கான பரிசுத் தொகைகளில் முதல் 13 ஆண்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் பொற்கிழியும் அளிக்கப்பட்டன. அதன் பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு பரிசுத் தொகை ரூபாய் ஐந்தாயிரமாக உயர்த்தப்பட்டு பொற்கிழியும் அளிக்கப்பட்டன. பின்னர் பரிசுத் தொகை ரூபாய் பத்தாயிரமாக உயர்த்தப்பட்டு பொற்கிழியும் அளிக்கப்பட்டன.
ரூபாய் ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பொற்கிழி பெற்ற கலை அமைப்புகள்/நிறுவனங்கள்
தொகு- ரசிக ரஞ்சன சபா, திருச்சி. (1973 - 1974)
- ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, சென்னை. (1974 - 1975)
- ஸ்ரீ சண்முகானந்தா சபா, பம்பாய். (1975 - 1976)
- ரசிக ரஞ்சனி சபா சென்னை. (1976 - 1977)
- வாணி விலாச சபா கும்பகோணம். (1978 - 1979)
- தமிழ் இசைச் சங்கம், சென்னை. (1979 - 1980)
- ஸ்ரீ கிருஷ்ணகான சபா, சென்னை. (1980 - 1981)
- ஸ்ரீ தியாக பிருமம் கான சபா. (1981 - 1982)
- நாரத கான சபா, கரூர். (1982 - 1983)
- ஸ்ரீ கச்சாலீஸ்வரர் கான சபா, சென்னை (1983 - 1984)
- நெல்லை சங்கீத சபா, திருநெல்வேலி. (1984 - 1985)
- பொள்ளாச்சி தமிழ் இசைச் சங்கம், பொள்ளாச்சி. (1985 - 1986)
- சென்னை சங்கீத வித்வசபை (மியூசிக் அகடமி), சென்னை. (1986 -1987)
ரூபாய் ஐந்தாயிரம் பரிசுத் தொகை மற்றும் பொற்கிழி பெற்ற கலை அமைப்புகள்/நிறுவனங்கள்
தொகு- ஸ்ரீ சத்குரு சங்கீத சமாஜம். மதுரை (1989 - 1990)
- மயிலாப்பூர் பன் ஆர்ட்ஸ் கிளப்,. சென்னை (1991 - 1992)
- நாரத கான சபா, சென்னை (1992 - 1993)
- சிவகாசி ஆர்ட்ஸ் கிளப், சிவகாசி (1993 - 1994)
ரூபாய் பத்தாயிரம் பரிசுத் தொகை மற்றும் பொற்கிழி பெற்ற கலை அமைப்புகள்/நிறுவனங்கள்
தொகு- பிரம்ம கான சபா, சென்னை. (1994 - 1995)
- தமிழ் இசைச் சங்கம், காரைக்குடி. (1995 - 1996)
- கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், சென்னை. (1998)
- கம்பன் கழகம், சென்னை. (1999)
- கலைக்காவிரி திருச்சிராப்பள்ளி. (2000)
- அம்சத்வனி, சென்னை. (2000)