தமிழ்நாடு அரசுக் கல்லூரிகள்

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் நடத்தப் பெறும் கல்லூரிகள் தமிழ்நாடு அரசுக் கல்லூரிகள் என அழைக்கப் பெறுகின்றன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பாடப் பிரிவுகளைக் கொண்டு அவைகளைக் கீழ்காணும் பிரிவுகளில் பிரிக்கலாம்.

  1. அரசு மருத்துவக் கல்லூரி
  2. அரசு பொறியியல் கல்லூரி
  3. அரசு சட்டக் கல்லூரி
  4. அரசு வேளாண்மைக் கல்லூரி
  5. அரசு கலை அறிவியல் கல்லூரி
  6. அரசு கால்நடையியல் கல்லூரி
  7. அரசு கல்வியியல் கல்லூரி
  8. அரசு விளையாட்டுக் கல்வியியல் கல்லூரி
  9. அரசு சிறப்புக் கல்லூரி

அரசு மருத்துவக் கல்லூரி

தொகு

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் அலோபதி, சித்த மருத்துவம், ஓமியோபதி, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், இயங்குமுறை மருத்துவம் போன்ற மருத்துவ முறைகளின் கீழான கல்லூரிகள் நடத்தப் பெறுகின்றன. இவை அனைத்தும் அரசு மருத்துவக் கல்லூரிகள் என அழைக்கப் பெறுகின்றன. இவைகளில் அலோபதி எனப்படும் ஆங்கில வழி மருத்துவ முறையிலான கல்லூரிகள் நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் என அழைக்கப் பெறுகின்றன. பிற மருத்துவ முறைக் கல்லூரிகள் அந்த மருத்துவமுறையின் பெயரைக் கொண்டு அழைக்கப் பெறுகின்றன. அவைகள் கீழ்காணும் பெயரில் உள்ளன.

  1. அரசு மருத்துவக் கல்லூரி (அலோபதி)
  2. அரசு சித்த மருத்துவக் கல்லூரி
  3. அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி
  • பல் மருத்துவம், மருந்தாளுமை போன்ற மருத்துவத் தொடர்புடைய பிற கல்லூரிகளும் இதன் கீழ் வகைப்படுத்தலாம்.

அரசு பொறியியல் கல்லூரி

தொகு

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளைக் கொண்டு நடத்தப் பெறும் கல்லூரிகள் அரசு பொறியியல் கல்லூரிகள் எனப்படுகின்றன.

அரசு சட்டக் கல்லூரி

தொகு

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் சட்டப் பாடப்பிரிவுகளைக் கொண்டு நடத்தப் பெறும் கல்லூரிகள் அரசு சட்டக் கல்லூரிகள் எனப்படுகின்றன.

அரசு வேளாண்மைக் கல்லூரி

தொகு

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் வேளாண்மைப் பாடப்பிரிவுகளைக் கொண்டு நடத்தப் பெறும் கல்லூரிகள் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் எனப்படுகின்றன.

அரசு கால்நடையியல் கல்லூரி

தொகு

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் கால்நடை மருத்துவத்தை முதன்மைப் பாடப்பிரிவுகளாகக் கொண்டு நடத்தப் பெறும் கல்லூரிகள் அரசு கால்நடையியல் கல்லூரிகள் எனப்படுகின்றன.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தொகு

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் கலை மற்றும் அறிவியல் பாடங்களை முதன்மைப் பாடப்பிரிவுகளாகக் கொண்டு நடத்தப் பெறும் கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் எனப்படுகின்றன.தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 67 இருக்கின்றன.

அரசு கல்வியியல் கல்லூரி

தொகு

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் கல்வியியல் பாடங்களை முதன்மைப் பாடப்பிரிவுகளாகக் கொண்டு நடத்தப் பெறும் கல்லூரிகள் அரசு கல்வியியல் கல்லூரிகள் எனப்படுகின்றன.

அரசு விளையாட்டுக் கல்வியியல் கல்லூரி

தொகு

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் விளையாட்டுக் கல்வியியல் பாடங்களை முதன்மைப் பாடப்பிரிவுகளாகக் கொண்டு நடத்தப் பெறும் கல்லூரிகள் அரசு விளையாட்டுக் கல்வியியல் கல்லூரிகள் எனப்படுகின்றன.

அரசு சிறப்புக் கல்லூரிகள்

தொகு

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் மேற்காணும் பாடப் பிரிவுகள் தவிர சில சிறப்புப் பாடப் பிரிவுகளை மட்டும் முதன்மைப் பாடப்பிரிவுகளாகக் கொண்டு நடத்தப் பெறும் கல்லூரிகள் அரசு சிறப்புக் கல்லூரிகள் எனப்படுகின்றன. இவற்றில் கீழ்காணும் கல்லூரிகளை சிறப்புக் கல்லூரிகள் எனலாம்.