தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development and innovation Institute) என்பது தொழில் முனைவோரின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு அரசால் 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இது சென்னை, கிண்டியில் உள்ளது. இது குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இதன் தொலைநோக்கு வாசகம் தொழில் தொடங்க வாருங்கள், தோள் கொடுக்க நாங்கள் என்பதாகும்.[2]

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம்
தலைமையகம்பார்த்தசாரதி தெரு, இந்துஸ்தான் டெலிபிரிண்டர் ஊழியர் குடியிருப்பு, சிட்கோ தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600032, தமிழ்நாடு, இந்தியா
முதன்மை நபர்கள்வெ. இறையன்பு, இ.ஆ.ப, இயக்குநர்[1]
உரிமையாளர்கள்தமிழ்நாடு அரசு
இணையத்தளம்[1]

இந்த நிறுவனம் தொழில் தொடங்க விரும்புவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுபவர்களுக்கு தொழில் தொடங்கும் முன்பு இந்த நிறுவனத்தால் கட்டாயப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி நிறைவு செய்த பின் பயிற்சி பெற்றவர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயற்சி நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 'குழும வளர்ச்சி நிர்வாகிகள்' கருத்தரங்கம்: பங்கேற்க மே 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்". செய்தி. தி இந்து தமிழ். 5 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2018.
  2. ஜெ.கு.லிஸ்பன் குமார் (16 சூன் 2018). "தொழில் தொடங்க வாங்க.. தோள் கொடுக்க நாங்க... தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் வெ.இறையன்பு ஐஏஎஸ் நேர்காணல்". செவ்வி. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2018.
  3. கி.பார்த்திபன் (6 சூலை 2014). "உதவித்தொகையுடன் கூடிய தொழில் பயிற்சி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2018.