தமிழ்நாடு அரசு வலைத்தளம்

தமிழ்நாட்டு அரசின் உத்யோகபூர்வ இணையத்தளம் தமிழ்நாடு அரசு இணையத்தளம் ஆகும். இதன் இணைய முகவரி http://www.tn.gov.in/ ஆகும். இது ஆங்கில மொழியில் பல பயனுள்ள தகவல்களை கொண்டு இயங்குகின்றது. இதன் தமிழ் வடிவம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட, தொழில் நுட்ப ரீதியில் பின்தங்கிய ஒரு நிலையில் இருக்கின்றது.

தமிழ் வடிவம்

தொகு

தமிழ்நாடு அரசின் தமிழ்வடிவ முதல் பக்கத்தில் பின்வரும் முக்கிய பிரிவுகள் உள்ளன:

  1. ஆளுனர்
  2. முதல்வர்
  3. தலைமை நீதிபதி
  4. அமைச்சரவை
  5. சேவைகள்
  6. செயலாளர்கள்
  7. மாவட்ட ஆட்சியர்கள்

இவற்றில், பொதுமக்களுக்கு அதிகம் பயனளிக்கக் கூடியது சேவைகள் பக்கம்தான்.இங்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களே கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் பல தமிழ்நாட்டு திணைக்களங்களுக்கு இணையத்தளங்கள் இருந்தாலும் அவை தமிழில் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இணையதளக் குறை

தொகு

தமிழ்நாடு அரசு அமைப்பின் இணையதளங்களாக மொத்தம் 446 இணையதளங்கள் உள்ளன. இவற்றில் 26 இணையதளங்கள் மட்டுமே தமிழ் மொழியைப் பயன்படுத்தியுள்ளன. மற்ற தளங்கள் அனைத்தும் ஆங்கில மொழியையேப் பயன்படுத்தியுள்ளன. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா போன்ற நாடுகளின் அரச திணைக்களங்கள் முக்கிய தகவல்களை அங்கு வசிக்கும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு தமிழில் தந்து கொண்டிருக்கின்றன. தமிழர்கள் அதிகமுள்ள தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு அரசின் இணையத்தளங்கள் தமிழில் இல்லை என்பது பெரும் குறைதான். தொழில்நுட்ப வகையில் தமிழில் தகவல்களை தருவதற்கு பெரிய தடைகள் எதுவும் இல்லை. இருப்பினும் இத்தளங்கள் தமிழில் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் இதுவரை செய்யப்படவில்லை என்கிற குறைபாடுகள் இருக்கின்றன.[1]

தேசிய தகவல் மையம்

தொகு

தமிழ்நாட்டு அரச இணையத்தளம் இந்தியாவின் தேசிய தகவல் மையத்தால் வடிவமைப்பு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. தேசிய தகவல் மையத்தின் பிரிவு ஒன்று தமிழ்நாட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் இணைய முகவரி http://www.tn.nic.in/ ஆகும். தமிழ் நாட்டு திணைத்தளங்கள் தேசிய தகவல் மையம் - தமிழ்நாட்டு பிரிவுக்கு தமிழில் தகவல்களை வழங்கும் நிலையில் அந்த தகவல்கள் தமிழில் இணையத்தில் வழங்கப்படுவதற்கு எவ்விதக் கட்டுப்பாடுகளுமில்லை.

தகவல்கள் நம்பகத்தன்மை இல்லாதவையா?

தொகு

"we do not assume any legal liability on the completeness, accuracy or usefulness of the contents provided in this web site." என்று Disclaimer (பொறுப்பாகாமை) பகுதியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அரசு தகவல்களுக்கான தளங்களில் இதுபோன்ற குறிப்புகள் தகவல்களின் நம்பகத்தன்மையைக் குறைப்பதாக உள்ளது என்கிற குறைபாடும் உள்ளது. பல தளங்கள் வெளி தகவல்களுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பதும், சில தகவல்களை விரைவாக இற்றைபடுத்த முடியாமல் இருப்பதும் வழக்கம்தான். ஆனால் அரசு தளங்கள் மொத்தத் தகவல்களுக்கும் பொறுப்பை ஏற்காமல் இருப்பது சரியல்ல என்கிற குறைபாடும் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆட்சி மொழிக் கருத்தரங்கில் தேனி. எம்.சுப்பிரமணி உரை (தினமலர் செய்தி)

வெளி இணைப்புகள்

தொகு