தமிழ்நாடு இல்லம்

தில்லியில் உள்ள ஒரு கட்டடம்

தமிழ்நாடு இல்லம் (Tamil Nadu House) என்பது புது தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் விருந்தினர் மாளிகை ஆகும். தமிழ்நாடு மாளிகையில் வைகை-தமிழ்நாடு இல்லம், பொதிகை-தமிழ்நாடு இல்லம் என இரண்டு வளாகங்கள் உள்ளன. இந்த வளாகத்தில் வணிக மையம், உடற்பயிற்சி மையம், விளையாட்டரங்கம் போன்றவை உள்ளன. வைகை தமிழ்நாடு இல்லத்தில் 49 அறைகளும், பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் 73 அறைகளும் உள்ளன.[1]

வைகை-தமிழ்நாடு இல்லம்
Map
முந்திய பெயர்கள்மெட்ராஸ் ஹவுஸ்
பொதுவான தகவல்கள்
முகவரிஎண்.6 கௌடில்ய மார்க், சாணக்கியபுரி, புது தில்லி-110021
ஆள்கூற்று28°35′57.7″N 77°11′56.3″E / 28.599361°N 77.198972°E / 28.599361; 77.198972
நிறைவுற்றது1962
உரிமையாளர்தமிழ்நாடு அரசு
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை49
பொதிகை-தமிழ்நாடு இல்லம்
Map
பொதுவான தகவல்கள்
முகவரிஎண்.9. திகேந்திரஜித் மார்க், சாணக்கியபுரி, புது தில்லி-110021
ஆள்கூற்று28°34′59.6″N 77°11′26.7″E / 28.583222°N 77.190750°E / 28.583222; 77.190750
துவக்கம்16 செப்டம்பர் 2004
உரிமையாளர்தமிழ்நாடு அரசு
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை73

முதல் வளாகமான வைகை-தமிழ்நாடு இல்லம் 1962 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது முதலில் 'மெட்ராஸ் ஹவுஸ்'என்று அழைக்கப்பட்டது. இது சாணக்கியபுரியில், கௌடில்ய மார்க்கில் எண்.6 இல் அமைந்துள்ளது. இது சுமார் 1.757 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள கட்டடங்களாக குஜராத் பவன், அருணாச்சல பவன் ஆகியவை உள்ளன.[2]

இரண்டாவது வளாகமான தொதிகை-தமிழ்நாடு இல்லம் சாணக்யபுரி, திகேந்திரஜித் மார்க்கில் எண்.9 இல் உள்ளது. இது 2004, செப்டம்பர், 16 அன்று திறக்கப்பட்டது. இது சுமார் 1.966 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அருகிலுள்ள கட்டடங்களாக உத்தரகாண்ட் சதன், என்.இ. சி ஹவுஸ், திரிபுரா பவன் போன்றவை உள்ளன.[2]

இந்த இல்ல ஆணையர்கள் புது தில்லியில் தமிழ்நாடு அரசை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மேலும் அவர்கள் தமிழ்நாடு மாளிகையை நிர்வகிக்கின்றனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Protocol and Accommodation". Tamil Nadu House | NewDelhi :: தமிழ்நாடு இல்லம் | புது டெல்லி (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-19.
  2. 2.0 2.1 "About Tamil Nadu House". Tamil Nadu House | NewDelhi :: தமிழ்நாடு இல்லம் | புது டெல்லி (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-19.
  3. "Resident Commissioners". Tamil Nadu House | NewDelhi :: தமிழ்நாடு இல்லம் | புது டெல்லி (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-19.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_இல்லம்&oldid=4138933" இலிருந்து மீள்விக்கப்பட்டது