தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டம் - 1958

தமிழ்நாட்டில் உள்ள உணவு விடுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலை நிலைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டம்-1958 w:en: Tamilnadu Catering Establishments Act -1958 கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களுக்கு மட்டும் பொருந்துவதாகக் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் பொருந்தக் கூடிய உணவு விடுதிகளுக்கு, வாரவிடுமுறை நாட்கள் சட்டம் - 1942, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் - 1947 மற்றும் தொழிற்சாலைகள் சட்டம் - 1948 ஆகியவை பொருந்தாது.

உணவு விடுதிகள் தொகு

தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டம்-1958 பிரிவு - 2(1)ன் படி, பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகம் அல்லது தங்கும் வசதியுடன் உணவு வழங்கும் தொழில் இடங்கள் போன்றவை உணவு விடுதிகள் எனப்படும். சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவு பெற்ற சங்கங்களால் நடத்தப்படும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் போன்றவையும் உணவு விடுதிகள் எனப்படும். ஆனால் கல்வி நிறுவனங்கள் நடத்தும் உணவகங்கள் இச்சட்டத்தின் கீழ் உணவு விடுதி அல்ல.

உணவு விடுதிகள் பதிவு தொகு

இச்சட்டத்தின் பிரிவு - 3ன் படி ஒவ்வொரு உணவு விடுதியும் பதிவு செய்யப்பட வேண்டும். இச்சட்டத்தின் பிரிவு 4ன் படி உணவு விடுதியைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.இதன்படி உணவு விடுதியின் உரிமையாளர், இச்சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆய்வாளரிடம், உணவு விடுதியைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அவர் தகுந்த ஆய்வு மேற்கொண்டு அதில் திருப்தியடைந்தால் பதிவுச்சான்றிதழ் வழங்கி ஆணையிடுவார். இந்த விண்ணப்பம் விடுதி தொடங்கப்பட்ட 30 நாட்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும். இந்த விண்ணப்பம் கொடுக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் மாறான ஆணை எதுவும் அளிக்கப்படாத நிலையில் அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதாகக் கருதப்படும். இந்தப் பதிவுச் சான்றிதழ் ஒரு வருட காலத்திற்கு மட்டும் செல்லுபடியாகக் கூடியது. இச்சான்றிதழ் வருடம் தோறும் புதுப்பிக்கப்பட வேண்டும். புதுப்பித்தலுக்கும் பதிவு செய்வதற்கான நடைமுறைகள்தான் பின்பற்றப்படும்.

வேலை நேரம் குறித்த விதிகள் தொகு

  • தொழிலாளர்களை ஒரு நாளில் 9 மணி நேரத்திற்கு அதிகமாகாமலும், ஒருவாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு அதிகமாகாமலும் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
  • மிகுதிநேர வேலை செய்ய வேண்டியது இருந்தால் மொத்த வேலை நேரம் ஒரு நாளில் 10 மணி நேரத்தையும், மொத்த மிகுதி நேர வேலை நேரம் அடுத்தடுத்த மூன்று மாதத்தில் 54 மணி நேரத்தையும் தாண்டக் கூடாது.
  • வேலை நேரத்திற்கு அதிகமாக வேலை பார்த்த தொழிலாளிக்கு அவருடைய சாதாரண சம்பளத்தில் இரண்டு மடங்கு சம்பளம் மிகுதி நேரக் கூலியாக அளிக்கப்பட வேண்டும்.
  • தொழிலாளி தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது. அவருக்குக் குறைந்தது 30 நிமிடம் ஓய்வு வழங்கப்பட வேண்டும்
  • ஒரு உணவு விடுதியின் மொத்த வேலை நேரம், ஓய்வு நேரத்தையும் சேர்த்து 14 மணி நேரத்தைத் தாண்டக் கூடாது.

விடுமுறை நாட்கள் தொகு

வாரத்தில் ஒரு முழுநாள் வார விடுமுறையாக அளிக்கப்பட வேண்டும். இது தவிர அரசு அறிவிக்கும் அனைத்து விடுமுறை நாட்களும் பணிபுரிபவர்களுக்கு விடுமுறையாக அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விடுமுறை நாட்களுக்கும் அதற்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று இச்சட்டத்தின் பிரிவு 11 தெரிவிக்கிறது.

சலுகைகள் தொகு

வேலை நீக்கம் தொகு

ஆய்வாளரும் அதிகாரங்களும் தொகு

வெளி இணைப்புகள் தொகு