தமிழ்நாடு காவல்துறை மோதல் நிகழ்வுகள்
தமிழ்நாடு காவல்துறை மோதல் நிகழ்வுகள் என்பது தமிழ்நாடு காவல்துறை குற்றவாளிகளை கொன்ற நிகழ்வுகளாகும்.
காரணங்கள்
தொகுகாவலர்கள் தங்கள் பணியை மேற்கொள்ளும்போது, எதிர்பாராதவிதமாக, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் நேரத்தில், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள குற்றவாளிகளை கொன்று விடுகின்றனர். எதிர்பாராத நிகழ்வுகளுக்காக நெகிழ்ந்து கொடுக்கும் இதனை தங்களுக்கு சாதகமாக காவலர்கள் பயன்படுத்தி போலி மோதல்களை உருவாக்கி குற்றவாளிகளை கொல்கின்றனர்.
தமிழகத்தில் போலி மோதல்களை உருவாக்கி கொல்லப்பட்ட குற்றவாளின் எண்ணிக்கை ஏறக்குறைய நூறு ஆகும். இவ்வாறு குற்றவாளிகளை காவலர்களே கொல்வதை மனித உரிமை ஆணையம, மனித உரிமை அமைப்புகள் எதிர்க்கின்றன.
நிகழ்வுகள்
தொகு1979 ஆம் ஆண்டிலிருந்து 2019 செப்டம்பர் 24 ஆம் தேதிவரையான என்கௌன்டர் என்று அழைக்கப்படும் காவல் மோதல்களை விகடனில் துரைராஜ் குணசேகரன் ஆகியோர் தொகுத்திருந்தனர். [1]
ஆண்டு/நாள் | கொலை செய்யப்பட்டவர்கள் | இடம் |
---|---|---|
1979 செப்டம்பர் 17 | நக்சலைட் அப்பு | ஒகேனேக்கல் |
1980 செப்டம்பர் 17 | நக்சலைட் பாலன் | |
1990 | நக்சலைட் நாகராஜன் | திண்டுக்கல் அருகே |
1984 | சீவலப்பேரி பாண்டி | |
1996 | ரவுடி ஆசைத்தம்பியும், அவனின் கூட்டாளிகளான குணா, மனோ | சென்னை லயோலா கல்லூரி அருகே |
1996 ஜூலை | 'ஜிம் பாடி' கபிலன் | அடையாறு அருகில் |
1998 | கைபாம் மோகன் | |
1999 | மிலிட்டரி குமார் | |
2002 | சஞ்சய் காட்டியா, முருகேசன், காக்கா ரமேஷ், ஸ்டாலின், சுரா என்ற சுரேஷ் (இவர்கள் 5 பேரும் தனித்தனியாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.) | |
2002 செப்டம்பர் 29 | பயங்கரவாதி இமாம் அலி உட்பட 5 நபர்கள் | பெங்களூர் |
2003 செப்டம்பர் 26 | வெங்கடேச பண்ணையார் | தூத்துக்குடி |
2004 அக்டோபர் 18 | சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவரின் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி | |
2005 | ரமேஷ், மணிகண்டன் | |
2006 | கன்னியாகுமாரி ராஜன் என்ற உருண்டை ராஜன் | |
2006 ஜூன் 7 | சென்னை நாகூரான் | |
2006 ஆகஸ்ட் 12 | திருப்போரூர் செந்தில் குமார் | |
2006 அக்டோபர் 2 | திருச்சி முட்டை ரவி | |
2006 நவம்பர் 18 | காஞ்சிபுரம் கொர கிருஷ்ணன் | |
2006 டிசம்பர் 12 | பங்க் குமார் என்ற கொத்தவால்சாவடி குமார் | திருநீர்மலை பகுதியில் |
2007 ஜனவரி 13 | மதுரை மேலூர் டோரி மாரி | |
2007 பிப்ரவரி 5 | மணல்மேடு சங்கர் | மயிலாடுதுறை |
2007 ஆகஸ்ட் 1 | வெள்ளை ரவி மற்றும் அவரின் கூட்டாளி குணா | ஓசூர் அருகே |
2008 பிப்ரவரி 3 | மிதுன் சக்கரவர்த்தி | தஞ்சாவூர் |
2008 ஏப்ரல் 11 | ஜெயக்குமார், சுடலை மணி | துத்துக்குடி |
2008 ஏப்ரல் 19 | நவீன் பிரசாத் | கொடைக்கானல் |
2008 ஏப்ரல் 28 | பாம்பாலாஜி | தஞ்சாவூர் |
2008 ஜூலை 11 | பாபா சுரேஷ் | காசிமேடு பகுதியில் |
2008 நவம்பர் 16 | சேலம் கோபி | |
2009 ஜனவரி 19 | தெய்வேந்திரன் | |
2009 பிப்ரவரி 6 | சிவகங்கை சண்முகம் | |
2009 ஜூலை 9, சென்னை தனசேகரன். | ||
2009 ஜூன் 29 | சுந்தரமூர்த்தி. | விருதுநகர் |
2009 அக்டோபர் 2 | நாகை செந்தில் என்ற குரங்கு செந்தில் | |
2010 ஜனவரி 18 | மயிலம் அசோக்குமார் | |
2010 பிப்ரவரி 16 | திண்டுக்கல் பாண்டி மற்றும் கூடுவாஞ்சேரி வேலு | |
2010 பிப்ரவரி 16 | கல் மண்டையன் என்ற முருகன் மற்றும் கவியரசு | |
2010 மார்ச் 26 | கொற நடராஜன் | காஞ்சிபுரத்தில் |
2010 ஏப்ரல் 29 | சாத்தூர் குமார். | |
2010 நவம்பர் 10 | ட்ரைவர் மோகன் ராஜ் | கோவை |
2012 | பிரபு, பாரதி | சிவகங்கை |
2012 பிப்ரவரி | பீகாரைச் சேர்ந்த ஐந்து பேரை, | சென்னை வேளச்சேரி |
2015ம் ஆண்டு ஜூன் | பிரபல ரவுடி கிட்டப்பா | பத்தமடை |
2017 ஜனவரி | ரவுடி கார்த்திகைச்செல்வன் | சிவகங்கை |
2017 ஏப்ரல் | ரவுடி கோவிந்தன் | ராமநாதபுரம் |
2018 மார்ச் 1 | ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்தி | மதுரை |
2018 ஜூலை | ராயப்பேட்டை ரவுடி ஆனந்தன். | தரமணி |
2019 மே 02 | பகுதியில் ரவுடி கதிர்வேல் | சேலம் காரிப்பட்டி |
2019 ஜூன் 15 | ரவுடி வல்லரசு | சென்னை மாதவரம் பகுதியில் |
2019 செப்டம்பர் 24 | ரவுடி மணிகண்டன் | சென்னை கொரட்டூர் |
ஆதாரங்கள்
தொகு- ↑ சீவலப்பேரி பாண்டி முதல் மணிகண்டன் வரை. தமிழகத்தில் நடைபெற்ற என்கவுன்டர்கள்! துரைராஜ் குணசேகரன் - விகடன் - 26th Sep, 2019