தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (Tamil Nadu National Law University) முன்பு தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நாவலூர் கொட்டப்பட்டு ஊரகப் பகுதியில் அமைந்துள்ளது. இச்சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு தேசிய பல்கலைக்கழகம் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டுள்ளது.[1]. இது பல்கலைக்கழகத் தகுதி பெற்றது.
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2013 |
அமைவிடம் | , , |
வளாகம் | நாவலூர் கொட்டப்பட்டு |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | http://www.tnnls.in/ |
ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பில், நூறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இச்சட்டப் பல்கலைக்கழகம், 2012-2013 கல்வி ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு இளநிலைச் சட்டப் படிப்புகளும், இரண்டாண்டு முதுநிலை பட்டப் படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது.[2][3]. இச்சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு பொது சட்ட நுழைவுத் தேர்வில் (Common Law Admission Test-CLAT) தேறியிருக்க வேண்டும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "National Law School set up in Tamil Nadu". Deccan Herald. 14 February 2012. http://www.deccanherald.com/content/226979/national-law-school-set-up.html. பார்த்த நாள்: 14 February 2012.
- ↑ http://www.tnnls.in/pdf/ADMISSION_2014-2015_NEWS_ITEM.pdf
- ↑ "Site for National Law School inspected". The Hindu. 14 May 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3417002.ece. பார்த்த நாள்: 14 May 2012.
- ↑ http://tnnls.in/Mode_of_Admission.php