தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி

தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி (Tamilnadu Industrial Cooperative Bank - “TAICO Bank”), இந்தியாவில் அமைந்த முதல் தொழிற் கூட்டுறவு வங்கியாகும். இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது. இவ்வங்கி தமிழ்நாடு முழுவதும் 44 கிளைகளுடன் கூடியது.[1]இவ்வங்கி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான நிதி வழங்குவதே இதன் நோக்கமாகும்.[2][3]

சென்னை மாகாணத்தின் முன்னாள் தொழிற்துறை அமைச்சரும், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவருமான ஆர். வெங்கட்ராமனின் முயற்சியால், இவ்வங்கி செப்டம்பர் 1961 அன்று, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு, 1962 முதல் தனது பணிகளை துவக்கியது.

தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் வணிகத்துறை ஆணையாளரின் வழிகாட்டுதலின் படி இவ்வங்கி செயல்படுகிறது. வங்கியின் தலைமையகம் சென்னை, எழும்பூரில் உள்ள சி எம் டி. ஏ., வளாகத்தில் தரை தளத்தில் செயல்படுகிறது.

பணிகள் தொகு

  • தொழிற் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கடன்கள் மற்றும் முன்பணங்கள் வழங்குதல்
  • பொது மக்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் கோயில்களிடமிருந்தும் வைப்பு நிதிகள் பெறுதல்
  • பொது மக்களுக்கு பாதுகாப்பு பெட்டகங்களை வாடகைக்கு விடுதல்
  • பொது மக்களுக்கு நகைக்கடன், தனிநபர் கடன், அடமானக் கடன்கள் வழங்குதல்
  • வரைவோலைகள் வழங்குதல்
  • காப்புறுதி பத்திரங்களை விற்றல்
  • தொழில் முனவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குதல்

உறுப்பினர்கள் தொகு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட, வட்ட மற்றும் தொடக்க தொழிற் கூட்டுறவுச் சங்கங்கள்

நிர்வாகம் தொகு

24. செப்டம்பர் 2013 முதல் உறுப்பினர்களால் தேந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவினரால் இவ்வங்கியின் நிர்வாகம் செயல்படுகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Branches". Archived from the original on 2015-08-16. பார்க்கப்பட்ட நாள் 2015-10-06.
  2. http://agritech.tnau.ac.in/banking/crbank_taico.html
  3. Scheme
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-01. பார்க்கப்பட்ட நாள் 2015-10-06.

வெளி இணைப்புகள் தொகு