தமிழ்நாடு நிதி ஆணையம்
தமிழ்நாடு நிதி ஆணையம் (Tamil Nadu Finance Commission) இந்திய அரசியலமைப்பின் 243 (I) பிரிவின்படி அமைக்கப்படுகிறது. இந்திய நிதி ஆணையம் எவ்வாறு நடுவண் அரசிற்கும் மாநில அரசுகளுக்குமிடையே நிதி/வரி வருமானங்களை பகிர்வதை பரிந்துரைக்கிறதோ அவ்வாறே மாநில நிதி ஆணையங்கள் மாநில அரசிற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்குமிடையே நிதி பகிர்தலை தீர்மானிக்கின்றன. அரசியலைப்பின்படி தமிழக ஆளுநர் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு தலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் கொண்ட நிதி ஆணையத்தை அமைக்கின்றார்.
தமிழ்நாடு நிதி ஆணையம் கீழ்கண்ட நோக்கங்களுடன் செயல்படுகிறது;
- மாநிலத்திற்கு இந்திய நிதி ஆணையம் வழங்கும் வரி வருமானப் பகிர்வு, நிதிக்கொடைகள் இவற்றையும் திட்டப்பணிகளுக்கான செலவினங்களையும் கருத்தில் கொண்டு விதிக்கக்கூடிய வரிகள், கட்டணங்கள்,தீர்வைகள்ஆகியவற்றைப் பரிந்துரைத்தல்
- மாநில அரசுத் தொகுநிதியிலிருந்து எந்த அளவில் நிதி உதவி வழங்கலாம்
- மாநில அரசு ஈட்டிய வரிகள், கட்டணங்கள்,தீர்வைகள் வருமானத்திலிருந்து மாநில அரசுக்கும் பஞ்சாயத்துகளுக்குமான (நகராட்சிகள் உட்பட) பகிர்தல்