தமிழ்நாட்டில் நரபலிகள்
தமிழ்நாட்டில் நரபலிகள் என்பது மனிதர்களை இறைவனுக்கு பலி கொடுக்கும் சடங்குகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்த வரலாற்றினை விவரிப்பதாகும்.
நரபலிகள் குறித்தான தகவல்கள் இலக்கியங்களில் இருந்தும் கிடைக்கின்றன.
இலக்கியங்களில் நரபலி
தொகுசிலப்பதிகாரம்
தொகுசிலப்பதிகாரத்தில் அரசன் கோவலனை தவறான நீதியால் கொலை செய்தமையால், கண்ணகி மதுரையை எரிக்கிறார். இருந்தும் பாண்டிய நாட்டில் மழை இல்லாது பசியும், பஞ்சமும் சூழ்ந்தன. வெக்கை நோய்களும் பரவின. இதனால் பாண்டிய மன்னன், ஆயிரம் பொற்கொல்லர்களை பலிதந்ததாக கூறப்படுகிறது.[1]
இந்து சமயத்தில் நரபலிகள்
தொகுநவகண்டம், அரிகண்டம் போன்ற தற்பலிகள் குறித்தான தகவல்கள் கோயில் கல்வெட்டுகள், செப்பு பட்டையங்கள் மூலமாக கிடைத்துள்ளன.
தேருக்காக நரபலிகள்
தொகுதமிழகத்தில் இந்துசமய கோயில்களில் திருவிழாக்களின் போது தேரோட்டம் தடையின்றி நடக்க நரபலி தரப்பட்டுள்ளது. இவ்வாறான பலிகள் பெரும்பாலும் தற்பலியாக அமைந்துள்ளன. ஆண்களைப் போல பெண்களும் தேருக்காக நரபலி கொடுக்கப்பட்டமைக்கு பட்டையங்கள் கிடைத்துள்ளன.
- ஆறகளூர் திருக்காமீசுரமுடையார் கோவிலில் 1509ல் தேரோட்டம் நடக்கும்போது தாமதநல்லூர் என்ற ஊரைச்சேர்ந்த கைக்கோளர் பெருமான் என்பவருடைய மகன் பறையன்பறை நரபலி கொடுக்கப்பட்டதாக கல்வெட்டு உள்ளது.[1] இவர் தேருக்கு முன்பு தன்னுடைய உடல் பாகங்கள் ஒன்பது இடங்களில் சதையை அரிந்து வைத்து தன் தலையை தானே வெட்டிக்கொண்டு தேருக்கு நவகண்டம் என்ற தற்பலியை தந்துள்ளார். இதற்காக ஆறகளூரில் வசிக்க அவர் குடும்பத்தாருக்கு திருமஞ்சன வீதியில் இரண்டு மனை அளிக்கப்பட்டது. ஆறகளூர் காளிக்கோயில் ஓடைக்கு அருகே தியாகனூர் எல்லையில் நன்செய் நிலம் 250 குழியும், புன்செய் நிலம் 100 குழியும் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு நடுகல் சிற்பமும் எடுக்கப்பட்டுள்ளது.
- ஆவுலப்பம்பட்டி பட்டயத்தில் வாரக்கநாட்டு எல்லையில் இருக்கும் கரியகாளி அம்மன் கோவில் தேர் ஓடுவதற்காக உருமன் என்பவர் தன் மனைவியை பலி தர முன்வருகிறார். தேர் ஏறியும் அவர் சேராததாதல், உருமனையே காணியாளன் ஆக்குகிறார்கள் ஊர் மக்கள்.[1]
- 1708ஆம் ஆண்டு மே 13ஆம் நாள் காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மனுக்கு தேரோட்டம் நடத்தும்போது தேர் நின்று விட்டது. தேர் தடங்கள் இன்றி செல்ல சிம்ம அனுமன் என்பவரின் மனைவி ஆவல் தீத்தம்மாளை நரபலி தந்துள்ளார்கள். இது குறித்தான தகவல் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் மல்லிகுந்தத்தில் கிடைத்த பட்டையத்தில் இடம் பெற்றுள்ளது. [1]
- சிவகங்கை மாவட்டம் திருக்கோளக்குடி திருக்கோளபுரீசர் சிவாலயத்தில் புதிதாக தேர் செய்து விழா நடத்தினர். தேரோட்டம் தடைபட்டதால் நரபலி கொடுக்க முடிவெடுத்தனர். தற்பலி தர யாரும் முன்வராததால் கோவில் படிக்காவலரை பலி தந்துள்ளனர். இதனால் படிக்காவலரின் காதலியாகிய தேவி என்ற நடனப்பெண்ணும் இறந்துள்ளார். இச்சம்பவம் காரணமாக படிக்காவல் பரம்பரையினர் குடும்பங்களில் பிறக்கும் பிள்ளைகளுக்கு தேவி என்றும் தேவியான் என்றும் பெயர் சூட்டும் வழக்கம் வைத்துள்ளனர். [2]
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 https://www.bbc.com/tamil/india-63258501.amp கேரளாவில் பெண்கள் நரபலி: தமிழ்நாட்டு நரபலிகளின் பயங்கர வரலாறு; தேரை ஓட்ட, புதையல் எடுக்க நடந்த படுகொலைகள் முரளிதரன் காசி விஸ்வநாதன்- பிபிசி தமிழ் - 15 அக்டோபர் 2022
- ↑ https://www.hindutamil.in/amp/news/spirituals/56458-.html