அரிகண்டம் என்பது இறைக்கு தன்னுடைய தலையை ஒரே வெட்டில் அறுத்து சமர்ப்பிப்பதாகும். [1][2] இந்த முறையில் தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டோ, தலையை ஓரிடத்தில் இழுத்துக் கட்டியோ மறுகையால் வாள் கொண்டு கழுத்தினை அறுத்து பலி தந்தனர். இந்த வழக்கம் கொற்றவை எனும் காளிதேவிக்கு தங்கள் உயிரை தந்துள்ளனர். தமிழகத்தில் இந்த அரிகண்ட சிற்பங்கள் பல்வேறு இந்து சமய கோயில்களில் காணப்படுகின்றன. சில சிற்பங்கள் கோயில்களில் அல்லாமல் வெட்ட வெளியில் இருக்கின்றன. கொற்றவை தெய்வத்திற்கு கொடுக்கப்பட்ட இந்த பலி முறை குறித்து வைக்கப்பட்ட சிலைகள் கொற்றவை தெய்வக் கோயில்கள் அழிந்தபின்பும் உள்ளதாக கருதப்படுகிறது.

அரிகண்ட சிற்பம் திருவாசி மாற்றுரைவரதேசுவரர் சிவாலயத்தின் பிரகாரத்தில் உள்ளது.

புலவர்கள் தங்களுடைய திறனை நிறுபனம் செய்ய தங்களுக்குள் பல்வேறு போட்டிகளை வைத்துக் கொண்டனர். [3] அதில் அரிகண்டம் என்று குறிப்பிடும் படியான போட்டியில் கழுத்தில் கத்தியினைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருப்பர், போட்டிக்கு கொடுக்கப்படும் பொருள் அவர் கவி பாட வேண்டும். அதில் தவறும் பட்சத்தில் அந்த கத்தியால் தன்னுடைய கழுத்தினை அரிந்து கொண்டு சாக வேண்டும். இவ்வாறு புலவர்கள் யமகண்டம் என்றொரு போட்டியிலும் பங்கேற்றுள்ளனர்.

தவறான செய்திகள்

தொகு

பல ஆய்வாளர்கள் யமகண்டத்தினை அரிகண்டம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் யமகண்டத்தில் நின்று பாடியுள்ளார். சிலர் அதனை அரிகண்டம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். [4]

ஆதாரங்கள்

தொகு
  1. லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மரண தண்டனை விதித்த மன்னன்: 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் தகவல் எஸ்.கே.ரமேஷ் தி இந்து நாளிதழ்
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=4126
  3. http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article1466926.ece?service=print
  4. http://www.tamilvu.org/courses/degree/c012/c0124/html/c01246l2.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிகண்டம்&oldid=2111543" இலிருந்து மீள்விக்கப்பட்டது