தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் இந்தி மொழிச் சொற்கள்
இந்தியாவில் ஒன்றிய அரசு அதிகம் பயன்படுத்தும் ஆட்சி மொழியான இந்தி மொழிச் சொற்கள் பல அரசின் ஊடகங்கள் வழியாகவும், ஒன்றிய அரசு அலுவலகங்கள் வழியாகவும் தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களாக மாறிவிட்டன. அப்படி தமிழில் கலந்திருக்கும் இந்தி மொழிச் சொற்கள் பல இருக்கின்றன. அந்தச் சொற்களை இங்கு பட்டியலிடும் முயற்சி.
தமிழில் கலந்த இந்தி மொழிச் சொற்களும் அதற்குச் சரியான தமிழ்ச் சொற்களும் | |||
---|---|---|---|
வ.எண் | இந்தி மொழிச் சொல் | தமிழ்ச் சொல் | |
1 | ஆகாஷ்வாணி | வானொலி | |
2 | தூர்தர்சன் | தொலைக்காட்சி | |
3 | தோத்தி | வேட்டி | |
4 | அதிகார் | அதிகாரி | |
5 | மண்டல் | மண்டலம் | |
6 | படா | பெரிய | |
7 | சோட்டா | சிறிய | |
8 | சோர் | திருடன் | |
9 | அச்சா | நன்று | |
10 | பகுத் அச்சா | மிக நன்று | |
11 | ஜாவ் | போ | |
12 | ஜிந்தாபாத் | வாழ்க, வெல்க | |
13 | ஜெய்ஹிந்த் | இந்தியா வெல்க | |
14 | பாரத் | பாரதம் | |
15 | தர்ணா | மறியல் | |
16 | உதார் | உதாரணம் | |
17 | அபராத் | குற்றம் | |
18 | மஸ்தூர் | தொழிலாளர் | |
19 | கட்டுமஸ்து | கட்டுடல் | |
20 | வஸ்த் | பொருள் | |
21 | நமஸ்தே | வணக்கம் | |
22 | உத்தர் | வடக்கு | |
23 | சொஜ்ஜி | சிற்றுண்டி வகை | |
24 | சோக்ரா | ஏவல் செய்பவன் | |
25 | தட்டுவாணி | நாட்டுக்குதிரை | |
26 | தம்படி | காசு | |
27 | தம்புரு | நரம்பு வாத்தியம் | |
28 | துப்பட்டா | துணிவகை | |
29 | தூட்டி | ஆடை | |
30 | மிட்டாதார் | பணக்காரர் | |
31 | பந்த் | கடையடைப்பு | |
32 | மந்திரி | அமைச்சர் | |
33 | சுந்தர் | அழகு | |
34 | தோஸ்த் | நண்பன் | |
35 | பச்சா | மகன் | |
36 | பகவான் | கடவுள் | |
37 | சோடனை | ஒப்பனை | |
38 | சோதா | சோம்பேறி | |
39 | சோபதி | தோழன் | |
40 | டப்பா | தகரப்பெட்டி | |
41 | டபாய் | ஏமாற்று | |
42 | டீக்கு | சரி | |
43 | டேரா | தங்குதல் | |
44 | டோசர் | மோதுகை | |
45 | டோபி | சலவையாளர் | |
46 | டோலி | தூக்குப்படுக்கை | |
47 | முண்டாசு | தலைப்பாகை | |
48 | மோட்டா | கடினமான | |
49 | லேவாதேவி | கொடுக்கல் வாங்கல் | |
50 | ஜகா | பின் வாங்குதல் |
(தமிழில் கலந்துள்ள இதுபோன்ற சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- முனைவர் ந. அருள் எழுதிய “அருந்தமிழில் அயற்சொற்கள்” நூல் பக்கம் 119-120.