ந. அருள் (N. Arul) 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழான மொழி பெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தற்போது தமிழ் வளர்ச்சித் துறையின் புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ் வளர்ச்சித்துறை செயலர் மகேசன் காசிராசன் 2022 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.[1] உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பணியிடத்திற்கும், மொழிபெயர்ப்பு இயக்குநர் பணியிடத்திற்கும் முழுக்கூடுதல் பொறுப்பும் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ந. அருள்
N. Arul
பிறப்புதமிழ்நாடு,
 இந்தியா.
தேசியம்இந்தியர்
கல்விமுனைவர் பட்டம்
பணிஇயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (மு.கூ.பொ),
மொழிபெயர்ப்புத் துறை (மு.கூ.பொ)
பணியகம்தமிழ்நாடு அரசு
சமயம்இந்து
பெற்றோர்அவ்வை நடராசன் (தந்தை)
வாழ்க்கைத்
துணை
சாலை வாணி
உறவினர்கள்ஔவை துரைசாமி (தாத்தா)

அருந்தமிழில் அயற்சொற்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil)பட்டம் பெற்றார். பின்னர் புதுதில்லியிலுள்ள தில்லி பல்கலைக்கழகத்தின் இக்கால இந்திய மொழியியல் துறையின் வழியாக ஆங்கிலக் கவிஞர் சேக்சுப்பியரின் மொழிபெயர்ப்புகள், தழுவி எழுதிய படைப்புகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தேர்ந்த திறன் உடையவர்.

இவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான முனைவர் ஔவை நடராசனின் மகன் ஆவார். இவருடைய பாட்டனார் ஔவை துரைச்சாமியும் புகழ் பெற்ற தமிழறிஞராகவும் உரையாசிரியராகவும் அறியப்படுகிறார்.

வெளியான நூல்கள்

தொகு
  • அருந்தமிழில் அயற்சொற்கள் - ஔவை அறக்கட்டளை வெளியீடு (அக்டோபர்’ 2001)
  • விளம்பர வீதி - கௌதம் பதிப்பகம் வெளியீடு (ஜுலை’ 2015) [2]

விக்கிப்பீடியாவிற்கான பங்களிப்பு

தொகு
  • தமிழ் விக்கிப்பீடியாவின் மேல் மிகுந்த அக்கறை கொண்டு வளர்ச்சிக்கு உதவியும் வருகிறார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._அருள்&oldid=3610332" இலிருந்து மீள்விக்கப்பட்டது