விக்கிப்பீடியா:கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்புக் குழு
தமிழ்நாடு அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மற்றும் உலகத் தமிழ் இணைய மாநாடு ஆகியவற்றை வருகிற சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் நடத்தியது. இதையொட்டி தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவுக்கு கட்டுரை அளிக்கும் போட்டியைத் தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து நடத்தியது.
அரசு ஒருங்கிணைப்புக் குழு
தொகுஇந்தக் கட்டுரைப் போட்டிக்காக தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் ப. வி. ச. டேவிதார் அலுவலகக் கடிதம் (எண்: D.O.Letter No.625/B1/10, dated 26.2.2010) வழியாக அரசு சார்பு ஒருங்கிணைப்புக் குழு ஒன்றினை அமைத்திருந்தார். இக்குழுவில்
- ப. வி. ச. டேவிதார், இ.ஆ.ப., செயலாளர், தகவல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அரசு
- சந்தோஷ் பாபு, இ.ஆ.ப., நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு மின்னணுவியல் கழகம்
- முனைவர் ந. அருள், இயக்குநர் (மொழிபெயர்பு), தமிழ்நாடு அரசு
- முனைவர். ப.அர.நக்கீரன், இயக்குனர், தமிழ் இணையப் பல்கலைக் கழகம்
ஆகியோர் இடம் பெற்றனர்.
விக்கிப்பீடியா குழு
தொகுகட்டுரைப் போட்டி தொடர்பாக, பேராசிரியர். செ. இரா. செல்வக்குமார் ஒருங்கிணைப்பில் மின்னஞ்சல் மூலம்
- இ. மயூரநாதன்
- நற்கீரன்
- கனக சிறிதரன்
- ரவி
- சுந்தர்
- பரிதிமதி
- தேனி.எம்.சுப்பிரமணி
- சிவக்குமார்
- கார்த்திக்
- கலை
- கோபி
- குறும்பன்
- மணியன்
- டெரன்சு
- உமாபதி
ஆகியோர் கலந்துரையாடினர். தவிர, அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்களும் இப்போட்டி தொடர்பான பணிகளில் ஈடுபட்டனர்.
இணையத்தள அமைப்புக் குழு
தொகுபோட்டிகளுக்கான கட்டுரைகளைப் பதிவேற்றுவதற்காக http://tamilint2010.tn.gov.in என்ற முகவரியில் தனியாக ஒரு இணையத்தளம் வடிவமைக்கப்பட்டது. இப்பணிகளை
- முனைவர். மதன் குமார் (இயக்குநர், மாணவர் நலப் பரிவு, அண்ணா பல்கலைக்கழகம்-திருச்சி.)
- யுவராஜ் (முதுகலை கணினிப் பயன்பாட்டுப் பிரிவு மூன்றாமாண்டு மாணவர், அண்ணா பல்கலைக்கழகம்-திருச்சி.)
ஆகியோர் மேற்கொண்டனர்.