முனைவர் ந. அருள்

முனைவர் ந. அருள், 2009 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு அரசின் மொழி பெயர்ப்புத் துறையின் இயக்குனராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் இக்கால இந்திய மொழியியல் துறையின் வழியாக ஆங்கிலக் கவிஞர் சேக்சுப்பியரின் மொழிபெயர்ப்புகள், தழுவி எழுதிய படைப்புகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் முதல் அரசு செயலாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பாட்டனார் உரைவேந்தர் ஔவை துரைசாமியும் புகழ் பெற்ற தமிழறிஞர் ஆவார்.

ஆர்வம் மற்றும் பங்களிப்புதொகு

  • இவருடைய தொடக்க ஆய்வு அருந்தமிழில் அயற்சொற்கள் என்ற இள முனைவர் (M.Phil) என்ற ஆய்வேடு அச்சில் வெளிவந்து பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.
  • ந. அருள் விளம்பரத்துறையிலும், பொதுமக்கள் தொடர்புத் துறையிலும் அனுபவம் மிக்கவர். பொதுமக்கள் தொடர்புத் துறையில் பல்வேறு உத்திகளை உணர்ந்து செயற்படுத்திய வல்லுனர். இவர் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் நிகழும் 2010 ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டு நிகழ்வுகளிலும், தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத் துறை நடத்தும் பள்ளி, மற்றும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்காக நடத்தும் போட்டி நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதிலும் தகவல் தொழில்நுட்பச் செயலாளருடன் துணையாக பங்களித்து வருகின்றார்.
  • இவர் ஆங்கில மொழியிலும் தமிழ் மொழியிலும் தேர்ந்த திறம் உடையவர். இலண்டன் பல்கலைக்கழகங்களுடன் உறவு கொண்டு பல நாடுகளுக்குச் சென்ற கல்வி நுணுக்கம் வாய்ந்தவர். தமிழ் விக்கிபீடியாவில் ஆர்வம் கொண்டு அதனை வளர்க்கத் துடிப்போடு முனைந்து வருகிறார்.

புகழ்வாய்ந்த திரைக்கவிஞர் கபிலன் இவரைப் பற்றி எழுதிய கவி வரிகள் சில:

குயில் ஊதும் குழல் போலச் சிரிப்பான்; வானின்

குருத்து நிலா ஒளி போன்ற அழகன்;

அயல்மொழியில் தமிழ்ச்சொல்லை ஆய்ந்தான்;

எங்கள் ஔவைத்தாய் பெற்றெடுத்த ஆத்திச்சூடி;

முப்பால் வளர்ப்பு மகன்; மூதறிஞர் பேரன்; உப்புக்

கரிக்காத தமிழ் உணவு; கம்பன் செய்யுள்;

கணுவில்லாக் கரும்பிற்குக் கபிலன் வாழ்த்து.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:N.arul&oldid=502365" இருந்து மீள்விக்கப்பட்டது