தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் தெலுங்கு மொழிச் சொற்கள்
விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக தமிழ்நாடு இருந்த போது தெலுங்கு மொழி பேசுபவர்கள் பலர் பணியின் நிமித்தமாகக் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இருந்தனர். இதனால் தெலுங்கு மொழிச் சொற்கள் பல தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களாக மாறிவிட்டன. அப்படி தமிழில் கலந்திருக்கும் தெலுங்கு மொழிச் சொற்கள் பல இருக்கின்றன. அந்தச் சொற்களை இங்கு பட்டியலிடும் முயற்சி.
தமிழில் கலந்த தெலுங்கு மொழிச் சொற்களும் அதற்குச் சரியான தமிழ்ச் சொற்களும் | |||
---|---|---|---|
வ.எண் | தெலுங்கு மொழிச் சொல் | தமிழ்ச் சொல் | |
1 | செங்கல்வராயன் | முருகன் | |
2 | செகண்டி | கோன்மணி | |
3 | டக்கு (வார்) | பதிப்படை | |
4 | டமாரம் | முரசு | |
5 | டேவணி | முன்பணம் | |
6 | சோலி | கருமம் | |
7 | சொரு | உவர்ப்பு | |
8 | தக்கழ | பொய் | |
9 | ததி | தகுந்த நேரம் | |
10 | தரகரி | தரகன் | |
11 | துண்டறிக்கம் | முகக்களை | |
12 | துண்டை | துடுக்கன் | |
13 | துருசு | விரைவு | |
14 | துலாபி | பகட்டுச் செலாவணி | |
15 | தேலிக்கை | மென்மை | |
16 | தொம்பரம் | பலருக்குச் சமைத்த ஊண் | |
17 | நவாது | வெண் சர்க்கரை | |
18 | பவனி | உலா வரல் | |
19 | பிகுவு | இருக்கம் வலிவு | |
20 | பேட்டு | பட்டைக்கரை, சூடு | |
21 | லத்தி | சாணம், வெட்டை | |
22 | லாகிரி | மதுக்களிப்பு | |
23 | சேகரம் | கூட்டம் | |
24 | சோம்பு | பெருஞ்சீரகம் | |
25 | சௌக்கம் | பண்ட மலிவு | |
26 | டக்கு | விகு, பிகு | |
27 | டப்பை | மூங்கிற் பிளாச்சி | |
28 | டாப்பு | பட்டி | |
29 | டொங்கு | பொந்து | |
30 | தத்தினம் | நீர்ப்பிண்டப் படையல் | |
31 | தபலை | மாழைக்குடம் | |
32 | தனை | ஆசை | |
33 | தருசு | நெருங்கிய இலை | |
34 | திப்பை | மேடு | |
35 | துண்டன் | கொலைஞன் | |
36 | துத்து | பொய் | |
37 | துருதை | தினவு | |
38 | துப்பிரதண்டி | சொற்படி கேளாள் | |
39 | தோசிளி | இருவகைத்தவசம் | |
40 | பங்காரு | பொன் | |
41 | மலுவு | எடைக்கனம் | |
42 | பிசினாறி | கருமி, கஞ்சன் | |
43 | பொக்கிஷம் | பொருளறை | |
44 | ரம்பம் | அரிவாள் | |
45 | லப்பி | குப்பைக்காரி | |
46 | ஜண்டை | இணை ஜோடி | |
47 | ஜல்லடை | சலிதட்டு | |
48 | ஜாஸ்தி | மிகுதி | |
49 | ஜலுப்பு | நீர்க்கோவை | |
50 | ஜோடுதாலை | நீர்முகவை |
(தமிழில் கலந்துள்ள இதுபோன்ற சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)
இதனையும் காண்க
தொகுஉசாத்துணை
தொகு- முனைவர் ந. அருள் எழுதிய “அருந்தமிழில் அயற்சொற்கள்” நூல் பக்கம் 122-124.