தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - தகவல் தொடர்பு

பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது

தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் தகவல் தொடர்பு எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.

தகவல் தொடர்பு
வ.எண் தமிழிற் பயன்படுத்தும் சொல் இடம் பெற்றிருந்த மொழி சரியான தமிழ்ச் சொல்
1 இன்சூர் ஆங்கிலம் காப்புறுதி செய்
2 கவர் ஆங்கிலம் உறை
3 கார்டு ஆங்கிலம் அட்டை
4 போஸ்டாபீசு ஆங்கிலம் அஞ்சலகம் (அஞ்சல் அலுவலகம்)
5 மணியார்டர் ஆங்கிலம் காசுக் கட்டளை
6 ரிஜிஸ்தர் ஆங்கிலம் பதிவு
7 லேபிள் ஆங்கிலம் பெயர்ச்சீட்டு
8 லெட்டர் ஆங்கிலம் மடல்
9 ஜட்கா இந்தி
10 சப்பரம் இந்தி
11 டோலி இந்தி
12 ரேக்ளா இந்தி
13 தபால் இந்தி அஞ்சல்
14 லக்கோடா இந்தி
15 மேனா பாரசீகம்
16 கடுதாசி அரபு தாள்
17 ரிக்‌ஷா ஜப்பான் இழுவண்டி

(தமிழிற் தகவல் தொடர்பு எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)

*குறிப்பு: ஆங்கிலத்தில் மணியார்டர் எனப்படும் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் காசுக்கட்டளை என்று சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணவிடை எனும் பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு