முதன்மை பட்டியைத் திறக்கவும்

தமிழ்நாட்டில் இலத்திரனியல் கருவிகளை, பொருள்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் தொழிற்றுறை தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை எனப்படும். இலத்திரனியல் தொழிற்றுறை ஓர் உயர்தொழினுட்பத் தொழிற்றுறை ஆகும்.

தமிழ்நாடு மின்னணுவியல் தயாரிப்புத் துறையில் விரைவாக வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் மோட்டோரோலா, சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, டெல், நோக்கியா1 ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. டெல், வருடத்தில் தோராயமாக 4,00,000 மடிக்கணினிகள், மேசைத்தள கணினிகளைச் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலிருந்து தயாரிக்கிறது.[1][2]. சாம்சங் சென்னையில் 2007ஆம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலிருந்து ஆண்டில் தோராயமாக 10,20,000 குளிர்சாதனப் பெட்டிகளை 2010ஆம் ஆண்டிலிருந்து தயாரிக்கிறது[3].

  1. ^ - நவம்பர் 1, 2014 முதல் சென்னையில் உள்ள நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது.நோக்கியா ஆண்டில் தோராயமாக 25,00,000 கைபேசிகளை சென்னையிலிருந்து தயாரித்து வந்தது.

ஹவாய் 25 கோடி உரூபாய் செலவில் தமிழகத்தில் திருப்பெரும்புதூர் அருகே சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், மின்னணு, தொலைத்தொடர்புத் தொழிற்சாலையை அமைக்கவிருக்கிறது[4].

கீழே தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்னணு, நுகர்வோர் சாதனங்கள்.

நிறுவனம் தயாரிப்பு முதலீடு (மில்லியன் டாலர்) ஊழியர் எண்ணிக்கை
நோக்கியா2 கைபேசி 320 28,500 (மூடப்பட்டது)
பாக்ஸ்கான்3 மின்னணுப் பாகங்கள் 210 6500 (2014 டிசம்பர் 15இலிருந்து படிப்படியாக மூடப்படவுள்ளது [5])
பிளக்ஸ்டிராநிக்ஸ் மின்னணு வன்பொருள் 150 2000
சான்மினா-எஸ்.சி.எய் மின்னணு வன்பொருள் 95 1800
மோட்டரோலா கைபேசி 75 650
சாம்சங் நுகர்வோர் சாதனங்கள் 260 1400
டெல் கணிப்பொறி 60 750
பிஒய்டி மின்னணுப் பாகங்கள் 90 4000
போஸ்-சிமன்ஸ் நுகர்வோர் சாதனங்கள் 57 கட்டப்பட்டு வருகிறது.
வீடியொக்கான் நுகர்வோர் சாதனங்கள் 175 கட்டப்பட்டு வருகிறது.
சோனி டிவி - .
  1. ^ - நவம்பர் 1, 2014 முதல் சென்னையில் உள்ள நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது
  2. ^ - நோக்கியா மூடப்பட்ட பின்னர் இந்நிறுவனம் அதிகளவில் ஆட்குறைப்பு செய்து வருகின்றது [6](இதற்கு முந்தைய ஆண்டுகளில் சீனாவில் இதன் பணியாள்கள் தற்கொலையால் (Foxconn suicides) குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனம் இது.[7])

மேற்கோள்கள்தொகு