தமிழ்வழிப் பொறியியல் கல்வி

தமிழ் வழிப் பொறியியல் கல்வி தமிழகத்தில் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் (13 மே, 2006 முதல் 15 மே, 2011 வரை) துவங்கிய ஒரு திட்டமாகும். இது கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முன்மொழியப்பட்டது.[1]

நடைமுறைப்படுத்துதல்

தொகு

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மற்றும் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதன் முதலாக தமிழ்வழியில் பொதுவியல் (குடிசார் பொறியியல்) மற்றும் எந்திரவியல் ஆகிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள்

தொகு

ஆண்டுதோறும் ஒரு பிரிவுக்கு, அதாவது பொதுவியல் மற்றும் இயந்திரவில் இரண்டு பிரிவுகளுக்கும் தனித்தனியாக அறுபது மாணவர்கள் ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வில் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாடநூல்கள்

தொகு

இந்தப் படிப்புகளுக்கான பாடநூல்கள் ஆசிரியர்கள் மற்றும் தேர்ந்தெடுத்த, மூத்த தமிழ் வழிக் கல்வி மாணவர்களால் மொழி பெயர்த்து இயற்றப்பட்டன. பாடப் புத்தகங்களை தட்டச்சி மின்வடிவில் தர அதிகபட்சமாக 45 வரை ஒப்பந்தம் வெளியிடப்பட்டது.

உசாத்துணை

தொகு
  1. "ஒற்றன் செய்திகள்".