தமிழ் இசை இலக்கண வரலாறு (நூல்)

இசைத் தமிழ் வரலாற்றைப் பற்றி மு. அருணாசலம் எழுதியிருந்ததை இரண்டு தொகுதிகளாக,

  1. தமிழ் இசை இலக்கிய வரலாறு (தொகுதி-1, பக்கங்கள் 748)
  2. தமிழ் இசை இலக்கண வரலாறு (தொகுதி-2, பக்கங்கள் 644)
தமிழ் இசை இலக்கண வரலாறு
நூல் பெயர்:தமிழ் இசை இலக்கண வரலாறு
ஆசிரியர்(கள்):மு. அருணாசலம்
வகை:இசை, வரலாறு
துறை:இசை, வரலாறு, இலக்கியம்
காலம்:2009
இடம்:மதுரை, இந்தியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:644
பதிப்பகர்:கடவு பதிப்பகம்,
திருப்பாலை (அஞ்சல்),
மதுரை 625 014
பதிப்பு:2009
ஆக்க அனுமதி:மு. அ. சிதம்பரநாதன்

என்று பிரித்து முனைவர் உல. பாலசுப்பிரமணியன் பதிப்பாசிரியாராக இருந்து இரு நூல்கள் வெளியிட்டுள்ளார். இவ்வரிசையில் இது இரண்டாவது நூல்.

இந்த தமிழ் இசை இலக்கண வரலாற்றில் 16 அத்தியாயங்களும் 25 அட்டவணைகளும் உள்ளன. சங்க காலம் தொட்டு 20 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிகளில் இருந்து வந்துள்ள இசைச் செய்திகளை ஆய்ந்து அவற்றில் இருந்து இலக்கண வரலாற்றை விரிவாகத் தொகுத்துக் கூறியுள்ளார். இன்று கருநாடக இசை என்றும் தமிழ் இசை என்று அறியப்படுவனவற்றின் அடி வேர்களையும் தொடர்புகளையும் ஒழுங்கு முறைகளையும் ஒப்பிட்டும் இணைத்தும் காட்டியுள்ளார்.