தமிழ் நடைக் கையேடு

தமிழ் நடைக் கையேடு என்பது தமிழ் உரைநடையை எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைத் தொகுத்துத் தரும் ஒரு நூலாகும். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) ஆகிய நிறுவனங்கள் இக்கையேட்டின் உருவாக்கத்தில் பங்கேற்றன. இந்நூலின் முதல் பதிப்பை பிப்ருவரி 1999இல் மொழி அறக்கட்டளை வெளியிட்டது. மீண்டும் 2004இல் மொழி அறக்கட்டளைக்காக அடையாளம் பதிப்பகம் வெளியிட்டது.

தமிழ் நடைக் கையேடு
நூலாசிரியர்உருவாக்கம்: இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்)
பொருண்மைதமிழ் மொழி - நடை, தமிழ் உரைநடை இலக்கியம்
வெளியிடப்பட்டது1999 (மொழி அறக்கட்டளை), 2004 (அடையாளம் பதிப்பகம் - மொழி அறக்கட்டளைக்காக)
பக்கங்கள்140 (2007இல் மறு அச்சு செய்யப்பட்ட பிரதியில் உள்ளபடி)
ISBNபன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-177-20031-7
OCLC426087953

உருவாக்கத்தில் பங்கேற்றோர்

தொகு

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் மேனாள் இயக்குநரான இ. அண்ணாமலையின் நெறியாள்கையின்கீழ், அந்நிறுவனத்தின் வ. ஞானசுந்தரம், மொழி அறக்கட்டளையின் பா. ரா. சுப்பிரமணியன் ஆகியோர் இக்கையேட்டினைப் பதிப்பித்து வெளியிட்டனர். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் சார்பில் வ. ஞானசுந்தரம், க. இராமசாமி ஆகியோரும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் இராம. சுந்தரம், கி. அரங்கன், மு. சுசீலா ஆகியோரும், மொழி அறக்கட்டளையின் சார்பில் எஸ். ராமகிருஷ்ணன், பா. ரா. சுப்பிரமணியன், கே. நாராயணன் ஆகியோரும் இக்கையேட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உள்ளடக்கம்

தொகு

இக்கையேட்டில் நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்தும் முறை, சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதற்கான அடிப்படைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளதோடு, சந்தி விதிகள் பட்டியல் மூலமும், எடுத்துக்காட்டுக்கள் வழியும் விளக்கப்பட்டுள்ளன. பொருள் தெளிவு சிதைவுறா வண்ணம் உரிய சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தும் முறை, பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய எழுத்துப்பெயர்ப்பு உள்ளிட்ட முறைமைகள், அடிக்குறிப்பு, துணைநூற்பட்டியல் முதலானவற்றை ஆய்வுக்கட்டுரைகளில் எழுதும் முறை போன்றன விளக்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_நடைக்_கையேடு&oldid=2697213" இலிருந்து மீள்விக்கப்பட்டது