தமிழ் பீசி ரைம்ஸ் (இதழ்)

தமிழ் PCTimes அல்லது தமிழ் பீசிரைம்ஸ்(தமிழ் பீசி டைம்ஸ்) கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு தகவல் தொழில்நுட்பம் சஞ்சிகை. இது ஆரம்பகட்ட கணினி பயனர்களுக்கு ஏற்ற பல கட்டுரைகளை கொண்டிருக்கின்றது. சில கட்டுரைகள் எளிய தமிழிலும் சில கட்டுரைகள் இந்திய ஆங்கிலம் கலந்த தமிழ் இதழ் நடையிலும் எழுதப்பட்டுள்ளன. எனினும் இந்தியாவிலிருந்து வெளிவரும் தமிழ் கணினிக்க் கட்டுரைகளின் தரத்தினை அண்மித்ததான கட்டுரைகள் வெளிவருவது குறைவு என்றே கொள்ளலாம். ஆய்வு சார்ந்த கட்டுரைகள் இடம்பெறுவதில்லை. ஆரம்பநிலை வாசகர்களுக்கு பெரிதும் உதவும் அதேவேளை உயர்நிலை வாசகர்களை திருப்திசெய்யும் கட்டுரைகள் வெளிவருவது குறைவு. தொடர்ச்சியாக வெளிவரும் எம்.எஸ்.ஆபிஸ் போன்ற கட்டுரைகள் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த விடயங்களே மீள மீள எழுதப்படுவது குறைபாடாக தெரிகிறது. பக்கவடிவமைப்பு ஆங்கில கணினி பத்திரிகைகளுக்கு நிகராக உள்ளது. இலங்கையிலிருந்து பாராட்டத்தக்க முறையில் வெளிவந்த இந்தப் பத்திரிகை 2007 நவம்பருடன் துரதிஷ்டவசமாக இடைநிறுத்தப்பட்டுவிட்டது.

தமிழ் பீசி ரைம்ஸ்
இதழாசிரியர் கே. ரசாங்கன்
துறை தகவல் தொழில்நுட்பம்
வெளியீட்டு சுழற்சி மாதாந்தம்
மொழி தமிழ்
முதல் இதழ் மார்ச் 2006
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}
வெளியீட்டு நிறுவனம் விஜயா பத்திரிகை லிமிரட்
நாடு இலங்கை
வலைப்பக்கம் http://pctimes.wordpress.com/

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_பீசி_ரைம்ஸ்_(இதழ்)&oldid=800453" இலிருந்து மீள்விக்கப்பட்டது