தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் என்பது தமிழ் வளங்களை எண்ணிம வடிவில் ஆவணகப்படுத்தி (digitally archive), பாதுகாத்து (preserve), இணையம் ஊடாகப் பகிர்வதற்கான ஒரு செயற்திட்டம் ஆகும்.[1] தமிழ் ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயற்திட்டம், பின்னர் சிங்கப்பூர் தேசிய நூலகம், தேசிய மரபுடைமைக் கழகம், தேசியக் கலைகள் மன்றம், சிங்கப்பூர்ப் புத்தக வளர்​ச்சி மன்றம் உட்பட்ட அரச அமைப்புகளின் நிதி, நுட்ப ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகிறது. முதற் கட்டமாக சிங்கப்பூரில் 1965ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த இலக்கிய படைப்புகள் சிங்கப்பூர்த் தமிழ் மின் இலக்கியத் தொகுப்பாக எண்ணிமப்படுத்தப்பட்டு இணையம் ஊடாகப் பகிரப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள நூல்கள் அனைத்தையும் யாரும் தரவிறக்கிப் படிக்க முடியும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 350 Local Tamil Literary Works Digitised in Singapore

வெளி இணைப்புகள்

தொகு